Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி செய்த காரியத்தால் கடுப்பில் "பெரிய கைகள்".. இன்றைய மேட்சிலும் பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியின் தேர்வு பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

எப்படி

எப்படி

ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி தேர்வு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இன்று இந்திய அணியில் அதே வீரர்கள் ஆட உள்ளனர். மயங்க், தவான், கோலி, ராகுல், ஷ்ரேயாஸ், பாண்டியா, ஜடேஜா, ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா, சாஹல் ஆகியோர் ஆட உள்ளனர்.

மோசம்

மோசம்

இந்த போட்டியிலும் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள், 4 முழுநேர பவுலர்கள், 1 ஆல் ரவுண்டர் உடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. கடந்த போட்டியிலேயே இந்திய அணியில் பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை. ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலராக சாஹல் மட்டுமே களமிறங்கி இருந்தார்.

ஜடேஜா

ஜடேஜா

ஆல்ரவுண்டர் ஜடேஜா கூடுதலாக ஸ்பின் செய்தார். ஆனால் இவர்கள் இரண்டு பேராலும் பந்தை சரியாக சுழற்ற முடியவில்லை. கடந்த போட்டியில் கூடுதலாக ஒரு ஸ்பின் பவுலர் இருந்திருந்தால் இந்தியா எளிதாக விக்கெட் எடுத்து இருக்கும்.

சைனி

சைனி

அதேபோல் போன மேட்சில் சைனி சரியாக பந்துவீசவில்லை. அவருக்கு பதிலாக நடராஜனை அணியில் எடுத்து இருக்கலாம் என்றது கூறப்பட்டது. ஆனால் அதையும் இந்த முறை கோலி மாற்றவில்லை. அதே அணியுடன் கொஞ்சம் கூட மாறாமல் கோலி இந்திய அணியை களமிறக்கி உள்ளார். இந்திய அணி தேர்வை முன்னாள் வீரர்கள், பிசிசிஐ ஆதிக்கம் செலுத்த கூடிய விமர்சகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

களமிறக்கி உள்ளார்

களமிறக்கி உள்ளார்

அணியில் நடராஜன் மற்றும் குல்தீப் யாதவை கொண்டு வராதது ஏன் என்று கேட்டுள்ளனர். கோலியின் அணி தேர்வு மிகவும் தவறானது என்று தெரிவித்துள்ளனர். இந்த மேட்சிலும் இந்தியா தோல்வி அடைந்தால் கோலியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என்றுள்ளனர்.

Story first published: Sunday, November 29, 2020, 9:27 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+