Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு காலத்தில் எப்படி இருந்தார்.. சோகமாக சிரித்துக்கொண்டு அவர் சென்றதை பார்க்கவே..கோலிக்கா இந்த நிலை?

சிட்னி: இந்திய அணியின் கேப்டன் கோலி ஒரு காலத்தில் பேட்டிங்கில் கிங் போல இருந்தார். ஆனால் இந்த வருடம் கோலியின் பேட்டிங்கை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தற்போது டி20 போட்டியில் தற்போது மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

இந்த நிலையில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்து சொதப்பி வருகிறது. வரிசை

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

இந்த போட்டியில் வருத்தம் அளிக்க கூடிய விஷயம் என்றால் அது கேப்டன் கோலியின் விக்கெட்தான். இந்த வருடம் முழுக்க கேப்டன் கோலி சர்வதேச ஒருநாள் சதம் எதுவும் எடுக்கவில்லை. அதேபோல் ஆஸ்திரேலிய தொடரிலும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் கோலி அதிரடி காட்டவில்லை.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளிலும் இவர் மோசமாக திணறி வந்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கோலி ஐபிஎல்லில் நன்றாக ஆடினார். அதை தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் மோசமாக சொதப்பினார். மிக மோசமான பார்மில் கோலி கஷ்டப்பட்டு வருகிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இன்று நடந்த போட்டியிலும் கோலி மோசமாக திணறினார். ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆடும் கோலி இன்று மோசமாக திணறினார். பந்தை கணிக்க முடியாமல் கஷ்டப்பட்டார் . லெக் ஸ்பின் பவுலிங்கில் திணறினார்.

திணறல்

திணறல்

கடந்த மூன்று போட்டிகளில் ஷாட் பந்துகளில் அவுட் ஆன கோலி இன்று ஸ்வீப்சன் போட்ட லெக் ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆனார். இதை பார்த்து அவருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி விக்கெட் ஆனோம் என்று தெரியாமல் ஒரு நிமிடம் அவர் குழம்பி போனார். சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

சிரித்தபடி வருத்தத்தோடு அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்த ஆஸ்திரேலிய தொடரில் கோலி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கிங் கோலி இப்படி கஷ்டப்படுவது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

Story first published: Friday, December 4, 2020, 15:26 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+