Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் பாஸ் இப்படி.. மொத்தமாக இந்திய அணியை கொத்துக்கறி போட்ட கோலி.. உறைந்த ரசிகர்கள்.. என்னாச்சு?

சிட்னி: இந்திய டி 20 அணி தேர்வில் கேப்டன் கோலி இன்று மோசமாக சொதப்பி இருக்கிறார். கேப்டன் கோலியை இதனால் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்று டி 20 போட்டியில் வெற்றியோடு தொடங்க வேண்டுமென்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

டீம்

டீம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இன்று வித்தியாசமான இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்றைய போட்டியில் ஷிகர் தவான், ராகுல், விராட் கோலி, மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாகர், முகமது சமி, நடராஜன் ஆகியோர் களமிறங்கி ஆடி வருகிறார்கள்.

ஆர்டர்

ஆர்டர்

இந்திய டி 20 அணி தேர்வில் கேப்டன் கோலி இன்று மோசமாக சொதப்பி இருக்கிறார். இன்றைய போட்டியில் ஏன் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்று தெரியாவில்லை. முதல் டி 20 போட்டியில் முக்கியமான வீரருக்கு ஓய்வு வழங்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. பாண்டியா ஓவர் போட மாட்டார் என்பதால் இன்று இந்திய அணியின் பவுலிங் வீக்காக உள்ளது. நடராஜன் மட்டுமே டெத் ஓவர்களை கவனிக்க வேண்டும்.

மோசம்

மோசம்

அதேபோல் மிக முக்கியமான பவுலரான சாஹல் இல்லை. இன்று ஒரே முழு நேர ஸ்பின் பவுலர் மட்டுமே. அது வாஷிங்க்டன் சுந்தர். இன்னொரு பவுலர் ஜடேஜா. இரண்டு பேருமே ஆப் ஸ்பின் பவுலர்கள். இன்று லெக் ஸ்பின் பவுலர் அணியில் இல்லை. கேப்டன் கோலியை இதனால் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

தேர்வு ஏன்

தேர்வு ஏன்

ஏன் இந்திய அணியில் தேர்வில் கோலி இன்று மோசமாக சொதப்பினார் என்று தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வலிமையாக இருக்கும் போது முக்கியமான பவுலர்களை, அதுவும் ஐபிஎல் டி 20 தொடரில் நன்றாக ஆடிய இரண்டு முக்கிய பவுலர்களை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் இன்று கோலி கொத்துக்கறி போட்டு வைத்துள்ளார்.

நிலை என்ன

நிலை என்ன

இந்திய அணியில் இன்று உருப்படியான இரண்டு விஷயங்கள் என்றால் அது மணீஷ் பாண்டே,சஞ்சு சாம்சன் வருகைதான். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினார். அதேபோல் இன்னொரு பக்கம் மணீஷ் பாண்டே மிக சிறப்பாக ஆடினார். இதனால் இவர்கள் இருவரும் அணியில் எடுக்கப்பட்டனர். இதை தவிர இன்று வேறு நல்ல விஷயம் எதுவும் நடக்கவில்லை.

Story first published: Friday, December 4, 2020, 15:00 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+