Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவையே தூக்கிவிட்டார்.. நடராஜனை அணியில் எடுக்க காரணமே வேறு.. கோலி சொன்ன அந்த வார்த்தை.. ப்பா!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய டி 20 அணியில் தற்போது நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவை இன்று டி 20 போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

டி 20

டி 20

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நடராஜன் அறிமுகம் ஆனார். இந்திய அணியில் பவுலிங் செய்த இவர் 10 ஓவரில் 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அதிலும் இவர் விக்கெட் எடுத்த 6வது ஓவர்.. மெய்டன் ஓவர் விக்கெட் ஆகும். கடந்த 6 போட்டிகளில் பவர் பிளேவில் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய டி 20 அணியில் தற்போது நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார். இந்திய அணியில் இன்று பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. பும்ராவிற்கு பதிலாக டெத் ஓவர் போடும் பெரிய பொறுப்பு நடராஜனுக்கு வந்துள்ளது. நடராஜனை கோலி எந்த அளவிற்கு நம்புகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

உறுதி

உறுதி

இந்திய அணியில் நடராஜனை எடுத்தது ஏன் என்று கோலியே பேட்டி அளித்துள்ளார். அதில், நடராஜன் இந்திய அணிக்காக மூன்றாவது போட்டியில் நன்றாக பவுலிங் செய்தார். கட்டுக்கோப்பாக ஆடினார். அவரை தேர்வு செய்ய நிறைய காரணங்கள் இருக்கிறது.

செம

செம

சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பவுலர்கள் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சில வீரர்களுக்கு அதிக வொர்க் லோட் கொடுக்க கூடாது.

இன்று நடக்கும் போட்டி

இன்று நடக்கும் போட்டி

இதனால் இன்று நடக்கும் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நடராஜன் அணிக்குள் வந்துள்ளார், என்று கோலி குறிப்பிட்டுள்ளார். அதாவது பும்ராவிற்கு ஓய்வு கொடுத்து நடராஜனை உள்ளே கொண்டு வரும் அளவிற்கு நடராஜன் மீது கோலி நம்பிக்கை வைத்துள்ளார்.

பொறுப்பு

பொறுப்பு

இதனால் இன்று நடராஜனுக்கு சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உருவாகி உள்ளது. அதேபோல் பும்ரா இல்லாத அணியில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது. இன்று ஷமி , சாகர் ஆகியோர் நடராஜன் உடன் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

Story first published: Friday, December 4, 2020, 13:38 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+