Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்னல் தந்த கோலி.. மொத்தமாக தூக்குவதுதான் திட்டமா? இந்திய அணியின் வெற்றிக்கு பின்னிருக்கும் பிளான்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடக்கத்தில் இந்திய அணி சறுக்கினாலும் அதன்பின் வேகமாக மீண்டு வந்தது.

ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா இன்றும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 194 ரன்கள் எடுத்தது. இந்த வலுவான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்தியா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. தொடக்கத்தில் இருந்து 10+ ரன்கள் எடுத்தது.

மாஸ்

மாஸ்

இந்திய அணியில் தவான்,கோலி, ஷ்ரேயஸ் ஐயர், பாண்டியா என்று களமிறங்கிய எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். தவான் 52, ராகுல் 30, கோலி 40 என்று அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். இந்த போட்டியில் 19.4 பந்தில் இந்தியா 195 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றியின் மூலம் கேப்டன் கோலி முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மெசேஜ்.. பும்ரா இல்லாமலே வெற்றியைபெற முடியும் என்று கோலி நிரூபித்துள்ளார். முதல் போட்டியில் பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் இன்றும் பும்ரா இல்லாமல் இந்தியா வென்றுள்ளது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

முக்கியமாக இன்று நடராஜனை நம்பி இந்திய அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் நடராஜன் 3 விக்கெட் எடுத்த நிலையில் இன்றைய போட்டியிலும் 2 விக்கெட் எடுத்தார். இன்று வெறும் 20 ரன்கள் மட்டுமே நடராஜன் கொடுத்தார். இதன் மூலம் பும்ராவின் இருப்பிடத்தை நடராஜன் நிரப்பி உள்ளார்.

ரோஹித்

ரோஹித்

ரோஹித் சர்மாவிற்கு மிகவும் நெருக்கமானவர் பும்ரா. பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பவுலிங் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் கோலி அதை முறியடித்து உள்ளார். இதனால் அணியில் முக்கியமான சில பவுலர்கள் நீக்கப்பட்டு நடராஜனுக்கு நிரந்தரமான இடம் அளிக்கப்படும்.

பும்ரா

பும்ரா

பும்ரா இப்போது ஓய்வு எடுத்தாலும் வரும் நாட்களில் அணியில் இடம்பெறுவார். பும்ராவின் இடம் இந்தியா அணியில் உறுதிதான். அடஹெபோல் நடராஜனின் இடமும் இந்திய அணியில் உறுதிதான். இதனால் நடராஜன் வருகைக்காக சமி அல்லது புவனேஷ்வர்குமார் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் நடராஜனுக்காக முக்கியமான ஒரு வீரரை மொத்தமாக கோலி நீக்க வாய்ய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 6, 2020, 17:22 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+