Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் அவரை விட மோசமாச்சே.. இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்த செய்தி.. ஆஸ்திரேலியா செய்யும் மாஸ் மாற்றம்

சிட்னி: இந்திய அணிக்கு எதிராக விளையாட போகும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்த தொடரை வென்றுவிட்டது.

மீதம் இருக்கும் ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை மொத்தமாக கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாட போகும் கடைசி ஒருநாள் போட்டியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் வருகிறது. அதன்படி அணியில் டேவிட் வார்னர் இடம்பெற மாட்டார். இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொடை மற்றும் அடிவயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எங்கு காயம்

எங்கு காயம்

இதனால் இவர் இரண்டு முதல் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்குள் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ் ஏற்கனவே காயம் காரணமாக ஆட முடியாமல் உள்ளார்.

மார்ன்ஸ்

மார்ன்ஸ்

இவருக்கு பதிலாக அணியில் களமிறங்கிய மார்னஸ் தற்போது 4வது இடத்தில் இறங்கி அதிரடி காட்டி வருகிறார். இவர்தான் அடுத்த போட்டியில் வார்னருக்கு பதிலாக ஓப்பனிங் இறங்கி உள்ளார். இவர் கடந்த 10 சர்வதேச போட்டிகள் எதிலும் 50 ரன்னிற்கும் குறைவாக எடுக்கவில்லை. தனது வாழ்நாள் பார்மில் இந்த இளம் வீரர் இருக்கிறார்.

இளம் வீரர்

இளம் வீரர்

முக்கியமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நினைத்து பார்க்க முடியாத ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். வார்னரை விட சிறப்பாக ஆடி வரும் மார்னஸ் தற்போது இந்திய அணிக்கு எதிராக அடுத்த போட்டியில் ஓப்பனிங் இறங்க இருக்கிறார். இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இது வந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதேபோல் இன்னொரு பக்கம் 4வது இடத்தில் மேத்யூ வேட் அல்லது அலெக்ஸ் கேரி ஆகிய இரண்டு பேரில் ஒருவர் ஆட உள்ளனர். மார்ன்ஸ் ஆடிய 4வது இடத்தில் இவர்களில் ஒருவர்தான் ஆடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, December 1, 2020, 12:38 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+