சொல்லியும் கேட்கவில்லை.. எத்தனை வருட அவமானம்.. அதிகாரம் கைக்கு வந்ததும் "புரட்டி" எடுத்த ஆஸி வீரர்!
சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இன்று களமிறங்க மேத்யூ வேட் இந்திய அணியின் பவுலிங்கை புரட்டி எடுத்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா இன்றும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் இருந்து இன்று அதிரடியாக ஆடினார்கள்.

அதிரடி
இன்று ஆஸ்திரேலிய அணி சார்பாக மேத்யூ வேட் ஓப்பனிங் இறங்கினார். ஓப்பனிங் இறங்கிய வேட் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பவுலிங்கை புரட்டி எடுத்தார்.அடுத்தடுத்த பவுண்டரி, 2 ரன்கள் என்று வெளுத்தெடுத்தார்.

பவுலிங்
இந்திய அணியின் சாகர், ஷரத்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் என்று எல்லோருடைய பவுலிங்கிலும் மேத்யூ வேட் மாஸ் ஆட்டம் ஆடினார். எப்படி பவுலிங் போட்டாலும் அடிக்கிறார் என்று சொல்வார்களே அப்படித்தான் இவர் பவுலிங் செய்தார். அதிலும் இவர் எல்லா திசையிலும் பவுண்டரில் அடித்தார்.

வேட்
மேத்யூ வேடை எப்படி அவுட் செய்ய வேண்டும் என்று தெரியாமல் இந்திய பவுலர்கள் குழம்பி போனார்கள். மொத்தம் 32 பந்தில் இவர் 58 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி 1 சிக்ஸ் அடக்கம். கடைசியில் இவர் கொடுத்த கேட்சை கோலி மிஸ் செய்ய, அதே பந்தில் கோலி இவரை ரன் அவுட் செய்தார்.

ரன் அவுட்
இந்த போட்டியில் மேத்யூ வேட் தன்னை யார் என்று நிரூபித்து உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் டி 20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று இவர் பல முறை பேட்டி அளித்துள்ளார். ஆனால் இவருக்கு ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை.

எத்தனையாவது இடம்
ஆஸ்திரேலிய அணியில் இவர் 5வது இடத்தில் இறங்கி இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டார். பிபிஎல் தொடரில் இரண்டு வருடமாக இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு ஓப்பனிங் இறங்கி அதிரடி காட்டி வருகிறார். ஆனாலும் இவருக்கு ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த முறை
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் களமிறங்கினார். விளைவு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இன்று தன்னை ஓப்பனிங் வீரராக களமிறக்கிக் கொண்டார். இத்தனை நாட்கள் தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு இன்று சிறப்பான ஓப்பனிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் .


Click it and Unblock the Notifications