Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னமோ நடந்துவிட்டது.. சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்.. இந்திய அணிக்கு கிடைத்த பெரிய நல்ல செய்தி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் ஆடி வரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடக்கத்தில் இந்திய அணி சறுக்கினாலும் அதன்பின் வேகமாக மீண்டு வந்தது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதன்பின் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டி 20 போட்டிகளில் இந்திய அணி அதிரடியாக ஆடியது.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில் இந்திய அணிக்கு டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா பவுலர் மிட்சல் ஸ்டார்க் பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருந்தார். ஒருநாள் தொடரில் இவர் பெரிய அளவில் பார்மிற்கு திரும்பவில்லை. ஒருநாள் தொடரில் இவர் சரியாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்தார்.

ஆனால்

ஆனால்

ஆனால் டி 20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக ஸ்டார்க் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இருந்தார். 4 ஓவர் போட்ட ஸ்டார்க் இரண்டு விக்கெட் எடுத்தார். வெறும் 34 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தவானை சிறப்பான யார்க்கர் மூலம் கிளீன் போல்ட் செய்து விக்கெட் எடுத்தார்.

எப்படி

எப்படி

இதனால் டி 20 தொடரில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணிக்கு சாவாலான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து மிட்சல் ஸ்டார்க் வெளியேறி உள்ளார். இவரின் குடும்ப காரணங்களை குறிப்பிட்டு அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இவரின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். திடீர் என்று சொந்த ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாக சென்ற ஸ்டார்க்.. தற்போது தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இவர் இப்படி திடீரென வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இந்திய அணிக்கு இது நல்ல செய்தியாக வந்து இருக்கிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று ஸ்டார்க் வீசும் யார்க்கர் அஸ்திரம் இன்றி கொஞ்சம் நிம்மதியாக ஆட முடியும். ஸ்டார்க்கிற்கு பதிலாக இன்று ஆஸ்திரேலிய அணியில் ஆட போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, December 6, 2020, 10:46 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+