அம்மா கொடுத்த நம்பிக்கை.. அப்பாவை இழந்தபின்பும்.. இந்திய அணிக்காக ஆடிய முகமது சிராஜ்..வெற்றிநாயகன்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய இளம் வீரர் முகமது சிராஜ் கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். தனது அப்பா மறைந்த போதும் கூட இந்தியா திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இவர் தங்கி இருந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. சுப்மான் கில், முகமது சிராஜ் என்று இரண்டு அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்து வெற்றிபெற்றுள்ளது.
அதிலும் இந்த போட்டியில் இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக அறிமுகமான முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். சிராஜ் பவுலிங் செய்த விதம் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

கேள்வி
இவரை அணியில் எடுத்த போது அதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். சிராஜ் ஏன் அணியில் எடுக்கப்பட்டார் என்று தெரியும், அவர் ஆர்சிபி வீரர். இதனால் கோலி அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இது கோலி கோட்டா. இதில் வேறு எதுவும் இல்லை என்று கோலி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்
சிராஜ் அணிக்குள் எடுக்கப்பட்டதே இப்படி கேள்விக்கு உள்ளாகும் விதமாகவே இருந்தது. இந்த நிலையில்தான் தனது அறிமுக போட்டியில் சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். முதல் இன்னிங்சில் மார்னஸ் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளை சிராஜ் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்
அதேபோல் இன்னொரு பக்கம் இரண்டாவது இன்னிங்சில் 3 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட்டுகளை எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. அதிலும் முகமது சிராஜின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்தான் காலமானார். சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதுதான் அவரின் தந்தை காலமானார்.

அம்மா
இதனால் இவர் இந்தியா திரும்பி வர நினைத்தார். ஆனால் சிராஜின் அம்மாதான்.. ஆஸ்திரேலியாவில் இருந்து விளையாடிவிட்டு வரும்படி இவருக்கு ஊக்கம் அளித்தார். அம்மா சொல்படி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய அணிக்காக ஆடினார். முதலில் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷமி
முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அறிமுக போட்டியில் ஆடிய சிராஜ், தற்போது இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் வரும் நாட்களில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications