Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாதிரியான கண்டுபிடிப்பு.. நட்டுவை புகழ்ந்து தள்ளிய ஆஸி. ஊடகங்கள்..உச்சி முகர்ந்த ஜாம்பவான்கள்!

சிட்னி: இந்திய அணியில் நேற்று அறிமுகம் ஆன நடராஜன் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறார். முதல் போட்டியே அவருக்கு மிகவும் சிறப்பான போட்டியாக அமைந்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி பெயர் பெற்றவர் நடராஜன். ஹைதராபாத் அணிக்காக ஆடிய இவர் தனது யார்க்கர் பவுலிங் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிசிசிஐ அமைப்பும் இவரின் ஆட்டத்தை பார்த்து அசந்து போய் நேரடியாக இந்திய அணியில் நெட் பவுலர் வாய்ப்பு கொடுத்தது. ஆஸ்திரேலிய தொடரில் பயிற்சி மேற்கொள்ளவும் தேர்வு செய்தது.

எப்படி

எப்படி

ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் முன் இந்திய அணியில் தேர்வாகி இருந்த வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்றாக நடராஜன் டி 20 அணிக்குள் வந்தார். அதன்பின் சைனி காயம் அடைந்ததால் ஒருநாள் அணிக்குள்ளும் நடராஜன் வந்தார்.

நடராஜன்

நடராஜன்

சைனி தொடர்ந்து மோசமாக சொதப்பி வந்த நிலையில் நேற்று நடராஜன் இந்திய அணியில் தேர்வு ஆனார். இந்திய அணியில் முதல்முறை களமிறங்கிய நடராஜன் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பவுலிங் செய்தார். மொத்த தமிழகமும் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில், அதை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக பந்து வீசினார்.

சிறப்பு

சிறப்பு

நேற்று பவுலிங் செய்த இவர் 10 ஓவரில் 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அதிலும் இவர் விக்கெட் எடுத்த 6வது ஓவர்.. மெய்டன் ஓவர் விக்கெட் ஆகும். கடந்த 6 போட்டிகளில் பவர் பிளேவில் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவர் போட்ட கடைசி இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

டெத் ஓவர்

டெத் ஓவர்

தான் ஒரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை நேற்று நடராஜன் தனது பவுலிங் மூலம் நிரூபித்தார். இந்த நிலையில் நடராஜன் பவுலிங்கை கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் , ஆஸ்திரேலிய ஊடகங்கள் பாராட்டி வருகிறது. நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்கிறார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் இயான் பிஷப், டாம் மூடி, பிரட்லீ போன்ற வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு

பாராட்டு

முக்கியமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகங்கள் இவரை பாராட்டி, இவரின் வாழ்க்கை பயணத்தை கட்டுரையாக எழுதி உள்ளன. பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் சின்னப்பம்பட்டி டூ சிட்னி என்று கட்டுரைகள் எழுதி உள்ளன. இதெல்லாம் போக இந்திய கிரிக்கெட் வல்லுநர்கள், கிரிக்கெட் பயிற்சியாளர் ஸ்ரீதர் போன்றோரும் நடராஜனை பாராட்டி உள்ளனர்.

வாழ்த்து

வாழ்த்து

இன்னொரு பக்கம் தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் சிவகார்த்திகேயன் என்று பெரிய கூட்டமே நடராஜனின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள். நடராஜனின் முதல் போட்டியே சிறப்பாக அமைந்த காரணாத்தால் அவர் வரும் நாட்களில் இந்திய அணியில் கண்டிப்பாக விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, December 3, 2020, 10:20 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+