Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக ஒடுங்கிய இந்திய பவுலர்கள்.. "நட்டுவை" வரச்சொன்ன கோலி.. அடுத்து நடந்த பரபர சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியிலும் தமிழக வீரர் நடராஜனின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தொடக்கத்தில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி திணறியது.

ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி அதன்பின் நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்று நம்பிக்கை அளித்தது.

எப்படி பவுலிங்

எப்படி பவுலிங்

இந்திய அணி வெற்றிபெற்ற இரண்டு போட்டியிலும் தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்று இருந்தார். முதல் போட்டியில் இவர் 80 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். டி 20 போட்டியில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இவரின் ஓவர்கள் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் நடராஜன் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். இன்று இந்திய பவுலர்கள் எல்லோரும் ரன்களை வாரி வழங்கினார்கள். சாகர், ஷரத்துல் தக்கூர் என்று அடுத்தடுத்து ரன்களை வாரி வழங்கினார்கள். எப்போதும் ரன்களை கட்டுப்படுத்தும் வாஷிங்க்டன் சுந்தரும் இன்று சிக்ஸ், பவுண்டரி என்று வாரி கொடுத்தார் .

ரன்கள்

ரன்கள்

இதனால் ஒவ்வொரு ஓவருக்கும் 10+ ரன்கள் சென்றது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் கோலி குழம்பி போனார். இதையடுத்து அதிகமாக ரன் செல்கிறது என்பதால் 5வது ஓவரை வீச நடராஜனை கோலி அழைத்தார். எல்லா பவுலர்களும் ரன் கொடுக்கிறார்கள் என்பதால் 5வது ஓவரை வீச நடராஜனை கோலி வரவழைத்தார்.

 என்ன செய்தார்

என்ன செய்தார்

நடராஜன் எதற்கு களத்திற்கு வந்தாரோ அதை உறுதியாக செய்தார். பவுன்சர், யார்க்கர் என்று மாற்றி, மாற்றி சரியான லென்தில் பவுலிங் செய்தார். அதிலும் இவர் போட்ட ஷார்ட் பந்தை அடிக்க முடியாமல் டி ஆர்சி திணறினார். வரிசையாக யார்க்கர் போட்டுவிட்டு திடீரென நடராஜன் போட்ட ஷார்ட் பந்தை அடிக்க முடியாமல் ஆர்சி கேட்ச் கொடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

ஆஸ்திரேலிய ஓப்பனிங் இணை அடித்து துவம்சம் செய்து கொண்டு இருந்த நிலையில் இந்திய அணியின் பவுலர்கள் எல்லோரும் திணறிக்கொண்டு இருந்தனர். ஆனால் நடராஜன் மடடும் உள்ளே வந்து விக்கெட் எடுத்தார். முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் ஆஸி பார்ட்னர்ஷிப்பை பிரித்தார்.

ஆட்டிப்படைத்தார்

ஆட்டிப்படைத்தார்

இவர் போட்ட 5வது ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைத்தார். இதற்கு அடுத்த ஓவரில் வெறும் 6 ரன்கள் கொடுத்தார். இவர் போட்ட முதல் இரண்டு ஓவரில் ஒரு பவுண்டரி , சிக்ஸ் கூட இவர் கொடுக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 6, 2020, 15:06 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+