Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருகிட்ட?.. தேவையின்றி சீண்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர்.. முதல் போட்டியிலேயே நடராஜன் கொடுத்த நெத்தியடி!

சிட்னி: கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் வைத்த விமர்சனத்திற்கு தமிழக வீரர் நடராஜன் அதிரடி பதிலடி கொடுத்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.

நடராஜன்

நடராஜன்

இந்த போட்டியில் நடராஜன் இந்திய அணிக்காக களமிறங்கினார். இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டு இருந்ததை சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்தார். நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதை ஏற்க முடியாது. அவர் டெத் ஓவர்களில் மட்டுமே நன்றாக வீசுவார்.

நன்றாக வீசுவார்

நன்றாக வீசுவார்

இந்திய அணியில் டெத் ஓவரில் பவுலிங் செய்ய சமி, பும்ரா இருக்கிறார்கள். புதிய பந்தில் ஸ்விங் செய்யத்தான் ஆட்கள் இல்லை. நடராஜன் புதிய பந்தில் நன்றாக வீச மாட்டார். நடராஜன் முதல் பவர்பிளேவில் நன்றாக பவுலிங் செய்ய கூடிய வீரர் இல்லை. இதனால் அவரை அணியில் எடுத்து இருக்க கூடாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார்.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் சஞ்சய் மஞ்சிரேக்கர் வைத்த விமர்சனத்திற்கு தமிழக வீரர் நடராஜன் அதிரடி பதிலடி கொடுத்து உள்ளார். டெத் ஓவரில் மட்டும் நடராஜன் நன்றாக பவுலிங் செய்வார் என்ற விமர்சனத்திற்கு நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய முதல் போட்டியிலேயே.. தான் போட்ட இரண்டாவது ஓவரில் மெய்டன் விக்கெட் எடுத்துள்ளார்.

விக்கெட்

விக்கெட்

இதன் மூலம் பவர்பிளேவில் நீண்ட நாட்களுக்கு பின் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார். அதோடு டெத் ஓவர்களில் தான் போட்ட 2 ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 8 ரன்கள் கொடுத்துள்ளார். பவர்பிளேவில் நடராஜன் சரியாக வீச மாட்டார் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

அதற்கு தன்னுடைய முதல் போட்டியிலேயே நடராஜன் நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். மும்பை வீரர்களை தவிர வேறு யாரை பற்றியும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சரியாக பேசியது கிடையாது. சஞ்சய் மஞ்சிரேக்கரின் மோசமான தொடர் விமர்சனங்களுக்கு ஒவ்வொருமுறையும் இப்படி வீரர்கள் பதிலடி கொடுப்பது வழக்கம், இந்த முறை நடராஜன் அந்த பதிலடியை கொடுத்துள்ளார்.

Story first published: Thursday, December 3, 2020, 14:33 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+