Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிவ்யூவில் ஏற்பட்ட பெரிய குழப்பம்.. நடராஜன் எடுக்க வேண்டிய மாஸ் விக்கெட்.. கோலி இப்படி பண்ணிட்டாரே!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இன்று நடராஜன் எடுக்க வேண்டிய ஒரு விக்கெட் கோலி செய்த தவறால் மிஸ்ஸாகிவிட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் மேத்யூ வேட் இந்திய பவுலர்களை கதறவிட்டார்.

மோசம்

மோசம்

இந்திய பவுலர்கள் சாஹல், வாஷிங்டன் சுந்தர், சாகர் என்று களமிறங்கிய எல்லோரும் ரன் கொடுத்தனர். ஷரத்துல் தாக்கூர் 12 ஓவரில்தான் முதல் ஓவர் வீச வந்தார். ஆனாலும் அவர் முதல் பந்திலேயே சிக்ஸ் கொடுத்தார். இந்த போட்டியிலும் நடராஜன்தான ரன் செல்வதை கட்டுப்படுத்தினார்.

நடராஜன்

நடராஜன்

வாஷிங்க்டன் சுந்தர் 2 விக்கெட் எடுத்தாலும் ரன் செல்வதை கட்டுப்படுத்த தவறினார். நடராஜன் மட்டுமே ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். இந்த நிலையில் இவர் போட்ட 11வது ஓவரின் 4வது பந்தில் விக்கெட் விழுந்து இருக்க வேண்டியது. அந்த பந்தில் எல்பிடபிள்யூ விழுந்து இருக்க வேண்டியது.

 சரியான லைன்

சரியான லைன்

சரியான லைனில் குத்தி, ஸ்டம்பை நோக்கி பந்து சென்றது. அதை வவேட் காலால் தடுத்து இருந்தார். ஆனால் நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்கவில்லை. இதையடுத்து கோலி டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். ஆனால் கோலி 10 நொடிகள் முடிந்து, பெரிய திரையில் ரீப்ளே எல்லாம் காட்டப்பட்ட பின்புதான் எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்டார்.

கிடையாது

கிடையாது

கால தாமதமாக ரிவ்யூ கேட்ட காரணத்தால் அந்த டிஆர்எஸ் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த விக்கெட் கொடுக்கப்படவில்லை.ஆனால் ரிப்ளேயில் இது விக்கெட் என்று உறுதி செய்யப்பட்டது.

தவறு

தவறு

கோலி கொஞ்சம் வேகமாக ரிவ்யூ கேட்டு இருந்தால் விக்கெட் விழுந்து இருக்கும். கோலி செய்த தவறால் நடராஜன் எடுக்க வேண்டிய விக்கெட் மிஸ்ஸானது. மேத்யூ வேட் அதன்பின் மிகவும் அதிரடியாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 8, 2020, 15:21 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+