Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்க்கர் கிங் மட்டுமல்ல.. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தையே அசைத்த "நட்டு".. அந்த ஒரு ஓவரில் என்ன நடந்தது?

சிட்னி: யார்க்கர் கிங் என்று பெயர் பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் இன்று தனது பவுலிங்கில் காட்டிய வேரியேஷன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில் தற்போது டி 20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி முதலில் திணறியது. அதன்பின் ராகுல், ஜடேஜாவின் அதிரடியால் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இன்று இந்திய அணியின் பவுலிங் சிறப்பாகவே இருந்தது. ஜடேஜாவிற்கு தலையில் அடிப்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக சாஹல் களமிறங்கி பவுலிங் செய்தார். சாஹல் பவுலிங் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. தான் போட்ட 2 ஓவர்களிலேயே சாஹல் இரண்டு விக்கெட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

ஆனால் இன்று அதிகம் கவனம் ஈர்த்தது நடராஜன்தான். யார்க்கர் கிங் என்று பெயர் பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் இன்று தனது பவுலிங்கில் காட்டிய வேரியேஷன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. பொதுவாக யார்க்கர் மட்டுமே போடுவார் என்று பெயர் உள்ள நிலையில், இன்று நடராஜன் முதல் ஓவரிலேயே பவுன்சர், ஸ்லோ பால், யார்க்கர் என்று வித விதமாக பவுலிங் செய்தார்.

செம்ம

செம்ம

அதேபோல் இன்னொரு பக்கம் தான் போட்ட இரண்டாவது ஓவரில் மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்து இருப்பார். ஆனால் அந்த கேட்சை கே. எல் ராகுல் விட்டுவிட்டார் . ஆனால் நடராஜன் விடுவதாக இல்லை.அதே ஓவரின் 3வது பந்திலேயே மேக்ஸ்வெல் விக்கெட்டை எல்பிடபில்யூ முறையில் நடராஜன் எடுத்தார்.

துல்லியம்

துல்லியம்

நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை என்றாலும் கூட கோலி நடராஜனை நம்பி உடனே டிஆர்எஸ் எடுத்தார். அந்த டிஆர்எஸ் மூலம் மேக்ஸ்வெல் விக்கெட் உறுதியானது. இந்த போட்டியில் நடராஜன் நிறைய ஸ்லோ பால், ஷார்ட் பால் போட்டு அசத்தினார்.

யார்க்கர்

யார்க்கர்

தான் யார்க்கர் கிங் மட்டுமல்ல அனைத்து விதமான பந்துகளையும் போடுவேன் என்று இன்று நிரூபித்தார். நடராஜன் பொதுவாக புதிய பந்தில் விக்கெட் எடுக்க மாட்டார் என்று கருத்து நிலவியது. போன போட்டியில் அவர் புதிய பந்திலும் விக்கெட் எடுத்து பதிலடி கொடுத்தார்.

வேரியேஷன்

வேரியேஷன்

இந்த போட்டியில் தனது பவுலிங்கில் வேரியேஷன் காட்டி தனக்கு எதிராக வைக்கப்பட்ட இன்னொரு விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். உண்மையில் இவரிடம் சிறப்பான திறமைகள் உள்ளது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் இவர் இந்திய அணியில் சிறப்பான எதிர்காலத்தை பெறுவார்.

செம

செம

இதற்கு பின் தான் போட்ட இரண்டு ஓவர்களில் நடராஜன் மேலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் இவர் போட்ட 4 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் கெத்து காட்டி உள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 17:37 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+