பும்ரா, ஷமியால் கூட முடியவில்லை.. அசால்ட்டாக "சம்பவம்" செய்த நடராஜன்.. மிரண்டு போன ஆஸி பேட்ஸ்மேன்!
சிட்னி: இந்திய அணிக்காக பவுலிங் செய்து வரும் நடராஜன் இன்று முதல் பவர்பிளேவிலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆவதை தவிர்க்கும் வகையில் இந்திய அணி உஷாராகி பவுலிங் செய்து வருகிறது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

சேர்ப்பு
இந்த போட்டியில் இந்திய அணிக்காக நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார். சைனி நீக்கப்பட்டு அவரின் இடத்தில் தமிழக வீரர் நடராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். இன்று பவுலிங் செய்த நடராஜன் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பந்து வீசினார்.

செம் பவுலிங்
இவரின் முதல் ஓவரில் சிக்ஸ் சென்றாலும், பவுலிங்கை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். முக்கியமாக சரியான லென்தில் பந்து வீசினார். கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சரியாக ஷார்ட் பால் போடாத நிலையில் இன்று நடந்த போட்டியில் சிறப்பாக ஷாட் பால் மற்றும் யார்க்கர்களை கலந்து பவுலிங் செய்தார்.

விக்கெட்
இந்த நிலையில்தான் சிறப்பாக பந்து வீசி வந்த நடராஜன் இன்று முதல் பவர்பிளேவிலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்ன்ஸ் விக்கெட்டை நடராஜன் எடுத்தார். மார்னஸ் 7 ரன்கள் இருக்கும் போது நடராஜன் அவரை போல்ட் செய்தார். இதுதான் நடராஜனின் சர்வதேச முதல் விக்கெட் ஆகும்

சாதனை
இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணியின் முதல் பவர்பிளேவில் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் என்ற பெருமையை நடராஜன் பெற்று உள்ளார். இந்த தொடர் மட்டுமின்றி கடந்த 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி முதல் பவர்பிளேவில் விக்கெட் எடுத்ததே இல்லை. பும்ரா, ஷமி கூட விக்கெட் எடுத்தது இல்லை.. அந்த சாதனையை நடராஜன் படைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications