Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொன்னால்தான் புரியும்.. தேசிய அளவில் டிரெண்டான நடராஜன்.. கோலிக்கு அனுப்பப்பட்ட வலுவான மெசேஜ்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி லேசாக திணறி வரும் நிலையில் தமிழக வீரர் நடராஜன் தற்போது தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி நடந்து வருகிறது.

சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் பவுலிங் பெரிய அளவில் இதில் எடுபடவில்லை.

எப்படி

எப்படி

இந்திய அணியின் முக்கியமான பவுலர் பும்ரா தற்போது பார்ம் அவுட்டில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஆடியது போல சிறப்பாக ஆட முடியாமல் திணறி வருகிறார். சரியான லென்தில் பந்தை வீச முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

பும்ரா

பும்ரா

பும்ரா ஒரு பக்கம் இப்படி கஷ்டப்படும் நிலையில் இன்னொரு பக்கம் சாஹலும் சரியாக பந்து வீச முடியாமல் திணறி வருகிறார். பெரிய அளவில் விக்கெட் எடுக்க முடியாமல் அல்லது ரன் செல்வதை கட்டுப்படுத்த முடியாமல் சாஹல் திணறி வருகிறார்.ஷமி மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார்.

சைனி

சைனி

இந்த நிலையில்தான் இந்திய அணியில் நல்ல யார்க்கர் போடும் பவுலர் தேவைப்படும் நிலையில், கோலி தேவையில்லாமல் சைனிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். சைனி முழு பிட்னசில் இல்லை. அதேபோல் அவர் சரியாக பந்து வீசுவதும் இல்லை. ஆனாலும் கூட கோலி அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். சென்ற போட்டியை போல இந்த போட்டியிலும் சைனி மிக மோசமாக பவுலிங் செய்து வருகிறார்.

நடராஜன்

நடராஜன்

இதனால் நடராஜனை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒருநாள் அணிக்குழுவில் இருக்கும் நடராஜன் 11 பேர் கொண்ட அணியில் எடுக்கப்படவில்லை. இவரை 11 பேர் கொண்ட அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

தேசிய அளவில்

தேசிய அளவில்

இதனால் நடராஜன் பெயர் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இப்படி டிரெண்ட் செய்து சொன்னால்தான் கோலிக்கு புரியும். சைனியை விட நடராஜன் நல்ல பவுலர். நன்றாக ஸ்விங் செய்வார், யார்க்கர் போடுவார். அவரை எடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் கோலிக்கு வலுவான கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Sunday, November 29, 2020, 22:11 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+