Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லைனில் நிற்கும் முக்கிய வீரர்கள்.. அவரை அணியில் எடுக்க முடியாது.. நடராஜனுக்கு வைக்கப்படும் செக்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக ஆடி இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தியா தயாராகி வருகிறது.

பவுலர்கள்

பவுலர்கள்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பவுலிங் செய்த முகமது ஷமி கையில் காயம் அடைந்தார். இதனால் இவர் இந்திய அணி சார்பாக ஆட மாட்டார். அதேபோல் முதல் போட்டியில் உமேஷ் யாதவ் சரியாக பவுலிங் செய்யவில்லை.

மாற்றம்

மாற்றம்

இதனால் உமேஷ் யாதவும் இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஆட மாட்டார். தற்போது டெஸ்ட் அணியில் நெட் பவுலராக் தமிழக வீரர் நடராஜன் பவுலிங் செய்து வருகிறார். ஷமி, உமேஷ் யாதவ் அணியில் இடம்பெறாத நிலையில் நடராஜன் அணியில் எடுக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது.

நன்றாக பவுலிங் செய்கிறார்

நன்றாக பவுலிங் செய்கிறார்

வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்வதால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டது. ஷமிக்கு மாற்றாக நடராஜன் அணிக்குள் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நடராஜனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை டெஸ்ட் போட்டி நடக்க உள்ள நிலையில்.. நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

ஏன்

ஏன்

அதன்படி இந்திய அணியில் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவருக்கும்தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். முன்னுரிமை அடிப்படையில்தான் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

நடராஜன்

நடராஜன்

நடராஜன் நன்றாக பவுலிங் செய்கிறார். ஆனால் அவர் பயிற்சி ஆட்டம் எதிலும் ஆடவில்லை. இதனால் சைனி மற்றும் சிராஜ் ஆகியோர்தான் அடுத்த போட்டியில் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, December 23, 2020, 12:12 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+