Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க எல்லாம் மூத்த வீரரா?.. வைரலாகும் வித்தியாசமான உள்ளாடை.. தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளான வீரர்!

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மூத்த ஸ்பின் பவுலர் நாதன் லைன் தனது உள்ளாடை காரணமாக இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தோல்விக்கு சிறப்பான பதிலடியை இந்திய அணி கொடுத்துள்ளது.

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

 பவுலிங்

பவுலிங்

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமாக சொதப்பியது. இந்திய அணியின் பவுலர்கள் எல்லோரும் சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுத்தனர். முக்கியமாக இந்தியாவின் ஸ்பின் பவுலர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார்.

நாதன் லைன்

நாதன் லைன்

ஆனால் ஆஸ்திரேலியாவின் ஸ்பின் பவுலர் நாதன் லைன் சரியாக பந்து வீசவில்லை. இவரின் ஸ்பின் பவுலிங்கை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். இந்த நிலையில் தற்போது நாதன் லைன் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள் .

விமர்சனம்

விமர்சனம்

இப்படிப்பட்ட நிலையில்தான் நாதன் லைன் அணிந்து இருந்த உள்ளாடை ஒன்று வைரலாகி வருகிறது. நாதன் லைன் தனது புகைப்படம் பதியப்பட்ட உள்ளாடையை அணிந்து பயிற்சி மேற்கொள்ள வந்தார். நடுவரிடம் விக்கெட் என்று இவர் கேட்கும் புகைப்படம் பதிந்த உள்ளாடையை தனது பேண்டிற்கு மேல் அணிந்து நாதன் லைன் மைதானத்திற்கு வந்து இருந்தார்.

மைதானம்

மைதானம்

இவரின் உடை ஒரு பக்கம் சிரிப்பை வர வைத்தாலும் இன்னொரு பக்கம் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நீங்கள் இந்த உள்ளாடை மீது கவனம் செலுத்தும் நேரத்தில், உங்கள் பவுலிங் மீது கவனம் செலுத்தலாம் . அஸ்வின் தனது பவுலிங் மீது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

மோசம்

மோசம்

அஸ்வினை பார்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நடுங்கி போய் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்கள் உள்ளாடையில் படமும் வரைவதில் கவனம் செலுத்தி வருகிறீர்கள். ஆட்டம் மீது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்று பலரும் நாதன் லைனுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Story first published: Friday, January 1, 2021, 15:33 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+