Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை பாருங்க.. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கோலி கொடுத்த இடம்தான் காரணம்.. ஷாக் தந்த இளம் வீரர்!

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி இன்று களத்தில் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி மாற்றம் இன்றி அதே டீமுடன் களமிறங்கி உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியை விட இந்த போட்டியில் கொஞ்சம் நிதானமாக ஆடி வருகிறது.

நிதானம்

நிதானம்

இந்த போட்டியில் முதல் பவர்பிளேவில் ஷமி மற்றும் பும்ரா இருவரும் நன்றாகவே பந்து வீசி வருகிறார்கள். கடந்த போட்டியை விட இந்த போட்டியில் இரண்டு வீரர்களும் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். இதனால் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் திணறினார்கள்.

கட்டுப்படுத்தினர்

கட்டுப்படுத்தினர்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இவர்கள் இருவரும் கட்டுப்படுத்தி வந்த நிலையில் பவுலிங் செய்ய வந்த நவ்தீப் சைனி மோசமாக நடந்து கொண்டார். சரியான லென்தில் பவுலிங் செய்யவில்லை. யார்க்கர், பவுன்சர் வீசவில்லை. அழகாக பேட்டை நோக்கி பந்தை போட்டுக்கொடுத்தார்.

மோசம்

மோசம்

இரண்டு இந்திய பவுலர்கள் ரன் செல்வதை கட்டுப்படுத்தியும் கூட தொடர்ந்து நவ்தீப் சைனி விடாமல் ரன் கொடுத்துக் கொண்டே இருந்தார்.பெங்களூர் அணியில் இவர் விளையாடி வரும் நிலையில் தற்போது கோலி மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் இவர் சரியாக பந்து வீசுவது இல்லை.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் இவர் இடம்பிடிக்க கோலி கொடுத்த வாய்ப்புதான் முழுமுதற் காரணம். ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மோசமாக சொதப்பி வருகிறார். கடந்த போட்டியிலும் இவர் சரியாக பவுலிங் செய்யாத நிலையில் இந்த போட்டியிலும் மோசமாக சொதப்பி உள்ளார்.

Story first published: Sunday, November 29, 2020, 10:16 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+