Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவில் நின்று பேசிய அஸ்வின்.. குரல் கொடுத்த பண்ட்.. இந்தியா வென்றது இங்கேதான்.. வெல்டன் ரஹானே!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அணியின் கூட்டு முயற்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டீம் வொர்க்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அவமானம்.. விரக்தி.. கோபம்.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் அவமானம் காரணமாக தோல்விக்கு பின் இந்திய அணி எதிர்கொண்ட உணர்ச்சிகள்தான் இது. 36 ரன்களில் அவுட்டானது இந்திய அணியை மனரீதியாக உடைத்து போட்டு இருந்தது.

இதெல்லாம் போக இந்திய அணியில் இருந்து கோலி, சமி வெளியேறியது, ரோஹித் சர்மா இடம்பெறாதது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்திய அணி இன்னொரு மோசமான தோல்வியை சந்திக்க போகிறது என்று எல்லோரும் பதறிய நிலையில்தான் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா ருசித்து இருக்கிறது.

ஈகோ

ஈகோ

ஒரு கேப்டனாக எந்த ஈகோவும் இன்றி ரஹானே செயல்பட்டதுதான் இந்த வெற்றிக்கு காரணம். ஆம், ரஹானே ஒரு கேப்டனாக மட்டுமின்றி, நல்ல டீம் பிளேயராகவும் செயல்பட்டார். கோலி, தோனி கேப்டனாக இருக்கும் சமயத்தில், இவர்கள் வைத்தது மட்டுமே சட்டமாக இருக்கும். கோலி சொல்வதே வேத வாக்கு.

எப்படி

எப்படி

கூட்டாக சேர்ந்து திட்டங்களை வகுக்கும் போது கூட கோலி பேசுவார்.. வீரர்கள் எல்லோரும் கேட்பார்கள். கோலி பேசும்போது மூத்த வீரர்கள் கூட அவருக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் கோலிக்கு ஆலோசனைகளை வழங்க யோசிப்பார்கள். ஆனால் ரஹானே அப்படி இல்லை.. ஒரு கேப்டனாக இவர் எல்லோருடைய ஆலோசனைகளையும் செவி மடுத்து கேட்டார்.

ஆலோசனை

ஆலோசனை

முக்கியமாக அஸ்வின் பவுலிங் செய்த போது.. அவர்தான் முழுக்க முழுக்க திட்டங்களை வகுத்தார். பேட்ஸ்மேனை சுற்றி எல்லா பக்கமும் ஸ்லிப் அமைத்தது என்று அஸ்வின் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டார். வட்டமாக நின்று பேசும் போது கூட அஸ்வின்தான் ஆலோசனைகளை வழங்கினார். இன்னொரு பக்கம் போட்டிக்கு இடையில் இடைவேளை நேரங்களில் எல்லோருடைய கருத்தையும் கேட்டு ரஹானே முடிவு எடுத்தார்.

 ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி

இன்னொரு பக்கம் ஹனுமா விஹாரி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட ரஹானேவிற்கு ஆலோசனை வழங்கினார்கள். சிராஜ் போன்ற சொந்த ஊர் மாநில வீரர்கள் ஹனுமா விஹாரிதான் ஆலோசனைகளை வழங்கினார். ரஹானே இதை எல்லாம் தடுக்கவில்லை. வீரர்களுக்கு ரஹானே முழு சுதந்திரம் கொடுத்தார்.

பண்ட்

பண்ட்

முக்கியமாக ரிஷாப் பண்ட் கீப்பராக நிறைய ஆலோசனைகளை பவுலர்களுக்கு வழங்கினார். பீல்டர்களை மாற்றுவதில் கூட ரிஷாப் பண்ட் முக்கிய பங்கு வகித்தார். இப்படி அனைத்து விஷயத்திற்கும் ரஹானே முழு சுதந்திரம் அளித்தார்.

திட்டம்

திட்டம்

வீரர்களை அவர்கள் திட்டப்படி செயல்பட ரஹானே அனுமதித்தார். இந்த டீம் வொர்க்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதும் இந்திய அணி வெற்றிபெற இதுவே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 29, 2020, 17:25 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+