களத்தில் பாண்டியா கொடுத்த டிவிஸ்ட்.. 1 வருடத்திற்கு பின்.. இப்போதாவது இந்திய அணிக்கு அறிவு வந்ததே!
சிட்னி: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பாண்டியா கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பின் இப்போதுதான் கிரிக்கெட் போட்டிகளில் பவுலிங் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியின் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டிய முனைப்பில் இந்தியா ஆடி வருகிறது.
ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பெரிய அளவில் இந்திய அணியின் பவுலிங் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை.

எப்படி
இன்று இந்திய அணியில் மூத்த பவுலர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை. ஷமி, பும்ரா இரண்டு பேருமே பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. அதேபோல் இன்று பவுலிங் செய்த சாஹல், சைனி, ஜடேஜா 3 பேருமே ரன்களை அதிகம் கொடுத்தனர். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.

6வது பவுலர்
இந்திய அணி இன்றும் 5 பவுலர்கள் உடன் களமிறங்கியது. சாஹல், சைனி, ஜடேஜா,ஷமி, பும்ரா என்று ஐந்து பவுலர்கள் மட்டுமே இன்று களமிறங்கினார்கள். வெறும் 6 ஓவர்கள் மட்டுமே போட்ட சைனியும் 55 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இன்று 6வதாக ஒருவர் பவுலிங் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கட்டாயம்
இதன் காரணமாக 6வது பவுலராக யார் இறங்குவார் என்று கேள்வி எழுந்தது. சைனிக்கு மீதம் இருந்த ஓவர்களை கொடுத்தால் அதிக ரன்கள் செல்லும் என்பதால்.. இன்று 6வது பவுலராக ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்தார். எல்லோரின் ஓவரில் ரன் செல்கிறது என்பதால் பாண்டியா ஓவர் போட வந்தார்.

போன வருடம்
போன வருடம் காலில் ஆபரேஷன் செய்த பின் பாண்டியா பவுலிங் செய்யவே இல்லை. ஐபிஎல் தொடரிலும் பாண்டியா பவுலிங் செய்யவே இல்லை. இந்த நிலையில் ஒருவருடம் கழித்து இன்று பாண்டியா பவுலிங் செய்தார். இன்று பவுலிங் செய்த பாண்டியா மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

ஒரு வருடம்
இத்தனை மாதம் கழித்து பாண்டியாவை பவுலிங் செய்ய விட வேண்டும் என்ற அறிவு இன்றுதான் இந்திய அணிக்கு வந்துள்ளது. ஒரு வருடம் கழித்து பவுலிங் செய்வதற்கான அறிகுறியே அவரிடம் இல்லை. இன்று அவர் சிறப்பாகவே பவுலிங் செய்தார்.

சிறப்பு
தான் போட்ட நான்கு ஓவரிலேயே 1 விக்கெட் எடுத்தார். அதேபோல் இவரின் ஓவரில் மார்னஸ் விக்கெட் விழுந்து இருக்க வேண்டியது. மிஸ் பீல்ட் காரணமாக விக்கெட் விழவில்லை. இன்று பவுலிங் செய்த மற்ற பவுலர்களை விட பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்தார்.


Click it and Unblock the Notifications