Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜன் பிரதர் நீங்கதான் தொடர் நாயகன்.. கோப்பையை கொடுத்ததோடு.. பாண்டியா சொன்ன அந்த வார்த்தை.. ப்பா!

சிட்னி: இந்திய அணியில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் நடராஜனை மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. இந்தியா 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் முழு தொடரை இந்தியா வென்றுள்ளது.

அசத்தல்

அசத்தல்

இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ள தமிழக வீரர் நடராஜன் இந்த தொடர் முழுக்க சிறப்பாக பவுலிங் செய்தார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், கடைசியாக நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

எப்படி

எப்படி

இன்று நடந்த போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் வெறும் 33 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதோடு இவர் ஒரு விக்கெட் எடுத்தார். மேத்யூ வேட் விக்கெட்டிற்கு கோலி டிஆர்எஸ்கேட்டு இருந்தால் நடராஜன் இன்னொரு விக்கெட்டும் எடுத்து இருப்பார்.

விக்கெட்

விக்கெட்

இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை ஹர்திக் பாண்டியா தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தார். அவர்தான் விருதுக்கு தகுதியானவர், அவருக்குதான் விருது கிடைக்க வேண்டும் என்று கூறி நடராஜனுக்கு பாண்டியா கோப்பையை கொடுத்தார்.

டிவிட்

டிவிட்

இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பாண்டியா, நடராஜன் பிரதர்.. நீங்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடினீர்கள். அறிமுக தொடரிலேயே இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக நீங்கள் ஆடியதன் மூலம் உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பு நிரூபணம் ஆகிறது. இந்த தொடர் நாயகன் விருதுக்கு நீங்கள்தான் தகுதியானவர். இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள், என்று ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு

ஆதரவு

இந்திய அணியில் நடராஜனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா ஊக்குவிக்கிறார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.நடராஜனுக்கு தொடர்ந்து பாண்டியா ஊக்கமளித்து பேசி வருகிறார். நன்றாக ஆடுங்கள் என்று அறிவுரை வழங்கி வருகிறார்.நடராஜன்தான் ஆட்டநாயகன் ஆக வேண்டும். அவரின் எளிமை எனக்கு பிடித்து இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறும் அளவிற்கு இவர்கள் நெருக்கம் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 8, 2020, 19:21 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+