
விதிமுறைக்கு
கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் மூத்த பவுலர்கள் மிக மோசமாக சொதப்பி வந்தனர். பந்தை எளிதாக ஸ்விங் செய்யும் சாகர், சமி போன்ற பவுலர்கள் கூட பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டனர். இந்திய அணியின் பவுலிங் சொதப்புவதற்கு ஐசிசி கொண்டு வந்த முக்கியமான எச்சில் விதிமுறைதான் காரணமாக இருந்தது. கொரோனா காரணமாக பந்தில் எச்சில் தடவ கூடாது என்று விதி உள்ளது.

பந்து
பந்து சொரசொரப்பாக மாறாமல் அப்படியே இருந்தது. வீரர்களால் எச்சில் கொண்டு பந்தை தேய்க்க முடியவில்லை. இதனால் இந்திய பவுலர்களால் பந்தை ஸ்விங் செய்து விக்கெட் எடுக்க முடியவில்லை.இதனால் இந்திய பவுலிங்கின் போது பந்தை தேய்த்து ஸ்விங் செய்ய முடியாமல் வீரர்கள் கஷ்டப்பட்டனர். இதனால் பும்ரா, சாகல் போட்ட பந்துகள் கொஞ்சம் கூட ஸ்விங் ஆகவில்லை.

பும்ரா
இந்திய அணியின் மூத்த பவுலர் பும்ராவே பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் டெஸ்ட் தொடரில் தற்போது பிங்க் பால் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. இந்த பிங்க் பந்து வேகமாக தேய்ந்து விடுகிறது. இதனால் உடனே இந்த பந்து ஸ்விங் ஆக தொடங்கிவிடுகிறது. 3 ஓவர்கள் 4 ஓவர்கள் போட்ட பின்பே பந்து மிக சிறப்பாக ஸ்விங் ஆகிறது.

எளிதாக விக்கெட்
இதன் மூலம் இந்திய பவுலர்கள் எளிதாக விக்கெட் எடுக்கிறார்கள். பந்தை சரியான லென்தில் வீச முடியாமல் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு வந்தார் பும்ரா. அவருக்கும் கூட இந்த பிங்க் பால் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. அவரால் பந்தை எளிதாக ஸ்விங் செய்ய முடிகிறது. ஷமியும் இந்த பிங்க் பந்து மூலம் சிறப்பாக பந்து வீசுகிறார்.

பவுலிங்
இதன் மூலம் சமி இதுவரை 5 விக்கெட், பும்ரா 2 விக்கெட் எடுத்துள்ளனர். இதன் காரணமாகவே பும்ரா, ஷமி இருவரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர். இந்த வாரம் நடக்கும் டெஸ்ட் தொடரில் பிங்க் பந்து மூலம் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஷமி பும்ரா ஜோடி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிங்க் பந்துகள் ஆஸ்திரேலிய தொடரில் பெரிய கேம் சேஞ்ஜராக இருக்க போகிறது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications