Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க நேரம் முடிந்தது.. தீவிர பயிற்சிக்கு இடையே வந்த ஷாக் செய்தி..இளம் வீரரை அதிரடியாக நீக்கிய ரஹானே

சிட்னி: இந்திய அணியில் பல முறை வாய்ப்பு கொடுத்தும் மோசமாக சொதப்பி வந்த இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி இல்லாமல் ரஹானே தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியில் தற்போது 4 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாளை நடக்கும் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஜடேஜா, பண்ட், ஹனுமா விஹாரி, அஷ்வின், பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

நீக்கம்

நீக்கம்

இந்திய அணியில் பல முறை வாய்ப்பு கொடுத்தும் மோசமாக சொதப்பி வந்த இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சுப்மான் கில் அணிக்குள் வாய்ப்பு பெற்றுள்ளார். ப்ரித்வி ஷா இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை.

மோசம்

மோசம்

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியிலும் டக் அவுட் எல்லாம் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இவர் தீவிரமாக பயிற்சி எடுத்து வந்தார். எம்சிஜி மைதானத்தில் இவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது

சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது

இவர் எப்படி அவுட் ஆகிறார் என்பதை வீடியோ போட்டு காட்டி இவருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின் மேற்கொண்ட பயிற்சியிலும் தனது தவறை திருத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அணியில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றுதான் முதலில் இந்திய அணி நினைத்தது. ஆனால் வலைப்பயிற்சியில் ப்ரித்வி ஷா கொஞ்சம் கூட நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மான் கில்லை இந்திய அணியில் எடுக்க ரஹானே முடிவு செய்துள்ளார்.

Story first published: Friday, December 25, 2020, 13:03 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+