"தலையில் பிரச்சனை".. 9 முறை அடுத்தடுத்து மண்டையில் அடிபட்ட வீரர்.. நொறுங்கும் கிரிக்கெட் கெரியர்?
சிட்னி: தலையில் அடிபட்டு பாதி போட்டியில் வெளியேறிய ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி பெரிதும் நம்பி இருந்த இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தற்போது அந்த அணியின் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
வில் புக்கோவ்ஸ்கி தலையில் அடிபட்டு பாதி போட்டியில் வெளியேறினார். இந்திய அணியின் இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்தில் இந்த சம்பவம் நடந்தது.

காயம்
இவருக்கு நேற்று மட்டும் இப்படி தலையில் அடிபடவில்லை. இதோடு 9வது முறையாக இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. 9வது முறையாக இவர் காயம் காரணமாக பாதி போட்டியில் வெளியேறி உள்ளார். இவர் 21 வயதுதான் ஆகிறது.

இதற்கு முன்பும்
ஆனால் அதற்குள் தலையில் இத்தனை காயம். தொடக்க காலத்தில் தலையில் பந்து வேகமாக பட்டதால் மட்டுமே வில்லிற்கு தலை சுற்றல் வந்தது. ஆனால் இப்போதெல்லாம் இவருக்கு பந்து மெதுவாக பட்டாலே தலை சுற்றல் வருகிறது. இதற்கு முன் இவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இப்படி நடக்கலாம்.

பழைய பாதிப்பு
பழைய பாதிப்புகள் போகாமல் இருப்பதால் இப்படி நடக்க வாய்ப்புள்ளது. வில்லிற்கு பழைய காயங்கள் காரணமாக ஏதாவது பின் விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம். இதன் காரணமாக தற்போது லேசாக காயம் ஏற்பட்டாலே இவருக்கு தலை சுற்றுகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் பீட்டர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வில் காயம் மிகவும் மோசமாக இருக்கிறது. என்னை கேட்டால் இவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பரிந்துரை செய்வேன். ஆனால் அதை நான் கூற முடியாது.

கிரிக்கெட் கெரியர்
அவர்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும். அவரின் கிரிக்கெட் கெரியர் தொடக்கத்திலேயே ஆபத்தில் உள்ளது . அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனி அவர் எப்படி ஆடுவார் என்பதே சந்தேகமாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications