For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றிபெற வேண்டிய நேரத்தில் இப்படி செய்யலாமா.. சீனியர் வீரர் மீது கோபத்தில் டீம்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா ஆடும் விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது. இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில் தற்போது பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதன்பின் இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது

எப்படி

எப்படி

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா ஆடும் விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

முதல் இன்னிங்சில் புஜாரா வெறும் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இன்று நடந்த இரண்டாவது இன்னிங்சிலும் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இரண்டிலும் சரியாக பாட் கும்மின்ஸ் ஓவரில் புஜாரா அவுட் ஆனார்.

புஜாரா

புஜாரா

புஜாரா தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாக காரணமே, அவர் தனது பழைய பேட்டிங் ஸ்டைலை மறந்ததுதான் காரணம் என்கிறார்கள். புஜாரா பேட்டிங் நிற்கும் முறை தொடங்கி அவர் ஷாட்களை தேர்வு செய்யும் முறை வரை எதுவும் பாராட்டும் வகையில் இல்லை. முன்பெல்லாம் புஜாரா மிகவும் பொறுமையாக ஆடுவார்.

மோசம்

மோசம்

ஆனால் இப்போதெல்லாம் தேவையில்லாத ஷாட்களை தேடி தேடி அவசரமாக அடிக்கிறார். அதிலும் இன்று இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த தோல்விக்கு பின் தற்போது கோலியும் அணியில் இல்லாத நிலையில் இந்திய அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகிறார்கள். ரஹானே, பும்ரா, கில் , பண்ட் வரை எல்லோரும் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள் .

புஜாரா

புஜாரா

ஆனால் புஜாரா அப்படி பொறுப்பை உணர்ந்து ஆடுவது இல்லை. இந்திய அணியில் தற்போது சீனியரான வீரர் புஜாராதான். அப்படி இருக்கும் போது புஜாரா இப்படி பொறுப்பின்றி ஆடுவது, அதிலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் எளிதான போட்டியில் இப்படி ஆடுவது விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சி குழு இதனால் புஜாரா மீது கோபத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, December 29, 2020, 17:14 [IST]
Other articles published on Dec 29, 2020
English summary
AUS vs IND: Pujara not satisfied the expectations against Australia in both matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+