Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவின் மாஸ் கேப்டன்சி.. ஆஸி.யை அடித்து துவைத்த பவுலர்கள்.. இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி முழுக்க இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட் எடுத்து அசத்தினார்.

அசத்தல்

அசத்தல்

அதன்பின் இந்திய அணி பேட்டிங் செய்த போது ரஹானே அதிரடியாக ஆடி சதம் எடுத்தார். இதனால் இந்தியா 10 விக்கெட்டை இழந்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.

விக்கெட்

விக்கெட்

அடுத்தடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். அதிலும் இந்திய அணியில் முகமது சிராஜ் , ஜடேஜா, அஸ்வின் , பும்ரா என்று எல்லோரும் சிறப்பாக பவுலிங் செய்தனர். சிராஜ் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இன்னொரு பக்கம் அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

எப்படி

எப்படி

இதனால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான சரிவிற்கு இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் திட்டமிடல் முக்கிய காரணம் ஆகும். ரஹானே கொடுத்த பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

செம

செம

அதிலும் பழைய பந்து, புதிய பந்து என இரண்டிலும் சிராஜை ரஹானே பயன்படுத்திய விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. ரஹானே எப்போது யாருக்கு ஓவர் கொடுப்பார் என்று தெரியாமல் குழம்பி போன ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆடி வருகிறது

ஆடி வருகிறது

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 2 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது . புஜாரா 3 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 5 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.அதன்பின் அதிரடியாக ஆடிய சுப்மான் கில், ரஹானே இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற்றது.

ஆடி வருகிறது

ஆடி வருகிறது

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 2 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது . புஜாரா 3 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 5 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.அதன்பின் அதிரடியாக ஆடிய சுப்மான் கில், ரஹானே இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெயரது.

Story first published: Tuesday, December 29, 2020, 17:23 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+