Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமைதியாக வந்து.. ஆக்ரோஷமின்றி சம்பவம் செய்த ரஹானே.. ஆஸியை. நடுங்க வைத்தது எப்படி.. செம பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் முறையான திட்டமிடல் மற்றும் கேப்டன்சி பெரிய அளவில் பாராட்டிற்கு உள்ளாகி உள்ளது. கோலியிடம் இல்லாத சில விஷயங்கள் ரஹானேவிடம் காணப்பட்டது.

அவர் பவுலர்களின் கேப்டன்.. இதுதான் இந்திய அணிக்குள் ரஹானேவிற்கு இருக்கும் பெயர். தோனி, கோலி இரண்டு பேருமே 4 பவுலர்களை வைத்து விளையாட ரெடியாக இருக்கும் போது , ரஹானே மட்டும் 5 பவுலர்கள் உறுதியாக வேண்டும் என்று கூறுபவர்.

3 ஸ்பீட் பவுலர்கள், 2 ஸ்பின் பவுலர்கள், கூடுதல் பவுலிங் செய்ய கூடிய ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதே ரஹானேவின் டெக்னிக். அதிலும் கோலி இல்லாத போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் போன்ற பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஜடேஜாவை ரஹானே அணியில் எடுத்தார்.

சிறப்பு

சிறப்பு

இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டனாக ரஹானே எடுத்த முடிவுகள் எல்லாமே மிகவும் சிறப்பாகவும், ஆச்சர்யம் அளிக்க கூடிய வகையிலும் இருந்தது. முதல் விஷயம் ஜடேஜாவிற்கு தைரியமாக வாய்ப்பு கொடுத்தது. அதன்பின் புதிய பந்திலேயே அஸ்வினை பவுலிங் செய்ய வைத்து விக்கெட் எடுத்தது என்று ரஹானே பல தரமான சம்பவங்களை செய்தார்.

பவுலிங்

பவுலிங்

முக்கியமாக ரஹானே கொடுத்த பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் பாண்டிங்கே ரஹானேவின் கேப்டன்சியை பாராட்டினார். கோலி இல்லை.. என்ன நடக்குமோ என்று எல்லோரும் அஞ்சிய நிலையில்.. ஒரு கேப்டனாக ரஹானே களமிறங்கி மாயம் நிகழ்த்தி இருக்கிறார்.

சிராஜ்

சிராஜ்

அதிலும் குறிப்பாக இவர் சிராஜை பயன்படுத்திய விதம் பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. ஆர்சிபி அணியில் ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சிராஜ் சரியாக ஆடவில்லை. ஆனால் கோலி கொடுத்த சப்போர்ட் காரணமாக சிராஜ் இந்திய அணிக்குள் வந்தார். ஆனால் அதே சிராஜை இந்த முறை ரஹானே பயன்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

சிராஜ் பவுலிங்

சிராஜ் பவுலிங்

பழைய பந்தில் சிராஜ் நன்றாக பந்து வீசுவார் என்பதால்.. இரண்டாம் பாதி வரை பொறுத்து இருந்து அவருக்கு ஓவர் கொடுத்தது. சிராஜுக்கு ஏற்றபடி ஸ்லிப் அமைத்தது என்று ரஹானே இரண்டாவது டெஸ்டில் அசத்தினார். முக்கியமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா என்று இரண்டு ஸ்பின் பவுலர்களுக்கு இவர் பீல்டிங் செட் செய்த விதம் பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியது.

கோபம்

கோபம்

கோலி போல களத்தில் இவர் கோபத்தை காட்டாமல் மிகவும் அமைதியாக திட்டங்களை வகுப்பது பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. அதிலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தோல்விக்கு ஒரு கேப்டனாக ரஹானே சிறந்த பதிலடி கொடுத்துள்ளார். கோலி என்ற ஒரு வீரரை நம்பி நாங்கள் இல்லை என்பதை ரஹானே நிரூபித்து இருக்கிறார்.

கோலி இல்லை

கோலி இல்லை

கோலி இல்லாமல் இந்திய அணி பெரிய சரிவை சந்திக்கும் என்று விமர்சித்தவர்கள் முகத்தில் ரஹானே கரியை பூசி உள்ளார். முறையான திட்டங்கள் மூலம், அணியில் இருக்கும் வீரர்களை வைத்தே வெற்றிபெற முடியும் என்பதை ரஹானே நிரூபித்துள்ளார். இந்திய அணி கோலி இல்லாமலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆக்ரோஷம் காட்டும் என்பதை ரஹானே அமைதியாக நிரூபித்துள்ளார்.

Story first published: Tuesday, December 29, 2020, 17:24 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+