Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் திட்டமே வேறு.. கோலிக்கு உருவான "இன்னொரு" தலைவலி.. ரஹானேவின் பிளான் இதுதான்.. பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கேப்டன் ரஹானேவிற்கு பிசிசிஐ ஆதரவு அதிகரித்து உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே இருந்தார்.

ரஹானே

ரஹானே

ஆஸ்திரேலிய அணிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் இந்திய அணி வெற்றிபெற்றதை கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்ட தொடங்கி உள்ளனர். முக்கியமாக ரஹானேவின் திட்டமிடல் சரியாக இருக்கிறது. அணியில் இருக்கும் வீரர்களுக்கு ரஹானே செவிமடுக்கிறார். ரஹானேவிடம் கூட்டு மனப்பான்மை இருக்கிறது.

 கூட்டு மனப்பான்மை

கூட்டு மனப்பான்மை

அவர் பவுலர்களை மதிக்கிறார், ஒரு லீடராக அணியை முன்னின்று வழி நடத்துகிறார் என்று பலரும் ரஹானேவை பாராட்ட தொடங்கி உள்ளனர். முக்கியமாக ரஹானேவிடம் இருக்கும் பல நல்ல குணங்கள் கோலியிடம் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. கோலி இந்திய அணியை ஒரு சர்வாதிகாரி போல நடத்துகிறார். கோலி கேப்டனாக இருந்தால் அவர் வைத்ததுதான் சட்டம்.

தவறு

தவறு

இதனால் கோலி எடுக்கும் சில முடிவுகள் தவறாக செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது. கோலி கேப்டன்சியில் இந்திய அணி செமி பைனல் , பைனல் போன்ற போட்டிகளில் தோல்வி அடைய, அவரின் சர்வாதிகார திட்டமிடல் போக்குதான் காரணம். ஆனால் ரஹானே அப்படி இல்லை. அவர் மிகவும் அமைதியாக திட்டமிட்டு மற்றவர்களை பேச அனுமதிக்கிறார் என்று பிசிசிஐ அமைப்பில் முக்கிய நிர்வாகிகள் கருத தொடங்கி உள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

இந்திய அணியில் ஒரே கேப்டன் வேண்டாம் 2-3கேப்டன்கள் இருக்கலாம் என்ற பேச்சுவார்த்தை எழுந்து வந்த நிலையில் ரஹானேவின் எழுச்சி இந்த பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தி உள்ளது. முன்பு கோலிக்கு ரோஹித் மட்டுமே தலைவலியாக இருந்தார். இந்த நிலையில் தற்போது ரஹானேவும் கோலிக்கு போட்டியாக மாறியுள்ளார் .

ரஹானே

ரஹானே

ஆம் ரஹானேவை டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. ஒருநாள் அணிக்கு கோலி கேப்டனாகவும், டி 20 அணிக்கு ரோஹித் கேப்டனாகவும் இருக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. ரஹானேவும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை நிரந்தரமாக எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, December 30, 2020, 17:05 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+