Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேரடியாக சென்று மன்னிப்பு கேட்ட ரஹானே.. எதுவும் சொல்லாத கோலி.. அடுத்த போட்டியிலேயே "தரமான" மெசேஜ்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகவும் அதிரடியாக ஆடி ரஹானே சதம்அடித்துள்ளார். சதம் அடித்த பின்பும் ரஹானே தற்போது அதிரடியாக ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது. இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில் தற்போது பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

அவுட்

அவுட்

இந்திய அணியில் நேற்று ஓப்பனிங் இறங்கிய மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய புஜாரா இன்று 17 ரன்களுக்கு அவுட் ஆனார். சுப்மான் கில் மட்டும் அதிரடியாக ஆடி 45 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய ரஹானே தொடக்கத்தில் கொஞ்சம் திணறுவது போல ஆடினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் போக போக ரஹானே மிகவும் அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி போட்டாலும் அதை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். ஷார்ட் பால், யார்க்கர் பால், ஸ்லோ பால் என்று அனைத்தையும் சிறப்பாக ரஹானே எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய பவுலர்கள் எவ்வளவு முயன்றும் ரஹானே விக்கெட்டை எடுக்க முடியவில்லை .

மோசம்

மோசம்

அதிலும் விஹாரி மற்றும் பண்ட் உடன் ரஹானே அமைத்த பார்ட்னர்ஷிப் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. சிங்கிள் மட்டும் அடிக்காமல் தேவைப்படும் நேரங்களில் ரஹானே பவுண்டரியும் அடித்தார். ரஹானேவின் பேட்டிங் டெக்னிக்கை பார்த்து ஆஸ்திரேலியா மிரண்டு போனது. நிதானமாக ஆடி அரை சதம் கடந்த ரஹானே தற்போது 70 ரன்களை கடந்து உறுதியாக ஆடி வருகிறார்.

ரஹானே

ரஹானே

முதல் டெஸ்டில் கோலியின் ரன் அவுட்டிற்கு ரஹானே காரணமாக இருந்தார். இதற்காக ரஹானே கோலியிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். இது தொடர்பாக ரஹானே அளித்த பேட்டியில், முதல் போட்டிக்கு பின் நான் கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் கோலி எதுவும் சொல்லவில்லை. அவர் என் மீது கோபமாக இல்லை.

ரஹானே என்ன சொன்னார்

ரஹானே என்ன சொன்னார்

எங்களுக்கு கோலி ஊக்கம் அளித்தார். இந்தியா திரும்பும் முன் கோலி எங்களிடம் பேசினார். ஆட்டம் மீது கவனம் செலுத்துபடி எங்களிடம் கூறினார். அணியாக இணைந்து ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்களிடம் கோலி குறிப்பிட்டார்., என்று ரஹானே கூறினார்.

சிறப்பு

சிறப்பு

இந்த நிலையில் தற்போது கோலியின் வெற்றிடத்தை ரஹானே நிரப்பி உள்ளார். ஒரு கேப்டனாக மிகவும் பொறுப்பாக ரஹானே ஆடி உள்ளார். கோலி இல்லாத நிலையில் சூழ்நிலையை உணர்ந்து ரஹானே மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார்.

Story first published: Sunday, December 27, 2020, 23:09 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+