Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் வருவது உற்சாகம் தருகிறது.. கோலி பற்றி வாய் திறக்காத ரஹானே.. மாறும் காட்சிகள்.. பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிக்கு கேப்டன் ரஹானே கோலி குறித்து எதுவும் பேசாமல் தவிர்த்தது சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து வென்றது.

என்ன

என்ன

இந்த போட்டிக்கு பின்பாக பேசிய இந்திய டெஸ்ட் அணியின் ரஹானே.. அணியில் இருக்கும் அனைத்து வீரர்களையும் பாராட்டினார். வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். களத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சரியாக திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

ரோஹித்

ரோஹித்

முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்று இருக்கிறோம். அணியில் அறிமுகமாகி இருக்கும் சுப்மான் கில், சிராஜ் இரண்டு பேருமே மிகவும் சிறப்பாக ஆடினார்கள், என்று இந்திய அணியின் கேப்டன் ரஹானே குறிப்பிட்டார். அதோடு ரோஹித் சர்மா குறித்தும் ரஹானே பேசினார்.

உற்சாகம்

உற்சாகம்

ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குள் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் நேற்றுதான் பேசினேன். இந்திய அணியுடன் இணைய ரோஹித் சர்மா ஆர்வமாக இருக்கிறார். அவர் அணிக்குள் வருவது உற்சாகம் அளிக்கிறது என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

ரோஹித் சர்மா இந்திய அணிக்குள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோலி குறித்து ரஹானே தனது பேச்சில் எதுவும் குறிப்பிடவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பின் மனவருத்தத்துடன் கோலி நாடு திரும்பினார்.

கோலி

கோலி

இந்தியா திரும்பும் முன் ரஹானேவிடமும், மற்ற வீரர்களிடமும் கோலி தனியாக பேசிவிட்டுதான் சென்றார். ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு பின் ரஹானே கோலி குறித்து எதுவும் சொல்லவில்லை. ரோஹித் குறித்து சந்தோசமாக பேசிய ரஹானே.. கோலி குறித்து எதுவும் பேசாதது சர்ச்சையாகி உள்ளது.

Story first published: Tuesday, December 29, 2020, 17:28 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+