For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஸ்திரியே பேச மறுத்துவிட்டார்.. உச்சத்திற்கு சென்ற ரோஹித் vs கோலி மோதல்..ரகசியத்தை உடைத்த கம்பீர்!

சிட்னி: விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்திய அணிக்குள் மீண்டும் ரோஹித் சர்மாவை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ரோஹித் இல்லாமல்தான் அணி தோல்வி அடைகிறது என்று வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ரோஹித் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

எப்படி

எப்படி

அதே சமயம் ரோஹித் சர்மாவிற்கு எதிராக கோலி அரசியல் செய்கிறார். வேண்டும் என்றே ரோஹித் சர்மாவை கோலி புறக்கணிக்கிறார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று பேசிய கோலி, ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆனது என்று தெரியாது. இது குறித்து தெளிவான விவரங்கள் என்னிடம் இல்லை.

விவரம் இல்லை

விவரம் இல்லை

அவர் ஏன் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என்று எங்களுக்கு தெரியாது, என்று குறிப்பிட்டார். ரோஹித் சர்மா குறித்து கோலி இப்படி கூறியது இன்னும் பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் கோலிக்கும் ரோஹித்திற்கும்இடையில் மோதல் இருப்பது உறுதிதான் என்று செய்திகள் வந்தது.

பேசவில்லை

பேசவில்லை

அதோடு ரோஹித் சர்மாவோடு கோலி பேசவில்லை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேச மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் இவர்களை கட்டாயப்படுத்தி நேற்று கான்பிரன்ஸ் கால் மூலம் பேச வைத்தனர். பிசிசிஐ இவர்களுக்கு இடையில் சமாதானம் செய்ய முயன்று வருகிறது என்று கூறுகிறார்கள்.

கம்பீர்

கம்பீர்

இந்த நிலையில் இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல் குறித்து கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த மோதலில் கோலி ரோஹித் மீது தவறு இல்லை. தேர்வு கமிட்டியைதான் கேள்வி கேட்க வேண்டும். இது தொடர்பாக மூன்று பேர் அமர்ந்து பேசினால் போதும்.

யார் தவறு

யார் தவறு

தேர்வு கமிட்டி தலைவர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா மூன்று பேரும் அமர்ந்து பேசி முடிவு எடுத்தால் போதும். பிரச்சனை சரியாகிவிடும். இதை வெளியே வளரவிட கூடாது. தேர்வு கமிட்டி எடுக்கும் முடிவை கோலியிடம் தெரிவிக்க வேண்டும். இதை எளிதாக கையாள நினைத்தால் கையாள முடியும், என்று கம்பீர் கூறி உள்ளார்.

Story first published: Monday, November 30, 2020, 17:09 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
AUS vs IND: Rohit and Kohli can solve the issues easily says Gautam Gambhir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X