Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓப்பனாக சொல்லிவிட்டார்.. போட்டிக்கு பின் கோலி சொன்ன விஷயம்.. ரோஹித் கொடுத்த பரபர பதில்!

சிட்னி: இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி, அதில் ரோஹித் சர்மா பெயரையும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.

இந்த தொடரில் தொடக்கத்தில் இந்திய அணி சறுக்கினாலும் அதன்பின் வேகமாக மீண்டு வந்தது.ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி 20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ரோஹித்

ரோஹித்

இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி, அதில் ரோஹித் சர்மா பெயரையும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கோலி தனது பேச்சில், டி 20 கிரிக்கெட் போட்டியில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடினோம். இந்திய அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லை. ஒரு பக்கம் பும்ரா இல்லை. இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா இல்லை. இரண்டு பேருமே முக்கியமான வீரர்கள்.

அவர்கள் இல்லாத அணி

அவர்கள் இல்லாத அணி

அவர்கள் இல்லாத அணி இந்த தொடரை வென்றது பெருமை அளிக்கிறது. இந்த அணியில் இருக்கும் வீரர்கள் பலரும் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்கு களத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

நடராஜன்

நடராஜன்

நடராஜன் மிக மிக சிறப்பாக விளையாடினார். ஷர்த்துல் தாக்கூர் மிகவும் சிறப்பாக ஆடினார் . ஹர்திக், ஷ்ரேயாஸ் சிறப்பாக ஆட்டத்தை முடித்தனர். ஷிகர் எடுத்த 50 ரன்கள் பெரிய அளவில் உதவியது. ஹர்திக் பாண்டியா முழுமையான பேட்மேனாக உருவெடுத்து உள்ளார்.

பினிஷிங்

பினிஷிங்

இந்திய அணியில் பினிஷிங் செய்யும் பணியை ஹர்திக் பாண்டியா கையில் எடுத்துக் கொண்டார். அவர் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உள்ளார். அவரின் இந்த பார்ம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியானதாக மாறியுள்ளது, என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி

இந்த ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் அணியை தவிர மற்ற அணிகள் எதிலும் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலியா செல்லவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலிய வரவில்லை என்றே தெரியவில்லை என்றும் கேப்டன் கோலி குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

நட்பு

நட்பு

இதனால் கோலி ரோஹித் சர்மா இடையே மோதல் நிலவுகிறது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது முதல்முறையாக ரோஹித் சர்மா பெயரை கோலி குறிப்பிட்டு, ரோஹித் சர்மா முக்கியமான வீரர் என்று கோலி ஓப்பனாக தெரிவித்துள்ளார். இதற்கு ரோஹித்தும் பதில் அளித்துள்ளார். இந்திய அணி சிறப்பாக விளையாடியது, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள் என்று ரோஹித் சர்மாவும் தெரிவித்துள்ளார்.

சமாதானம்

சமாதானம்

இரண்டு பேருமே முதல்முறையாக மாற்றி மாற்றி வாழ்த்தி.. கொஞ்சம் இறங்கி வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் பிசிசிஐ மூலம் வீடியோ கால் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. அதற்கு பின்தான் இவர்கள் இருவரும் சமாதானம் ஆகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் பேசி தீர்க்கப்பட்டுவிட்டது, இதனால்தான் இப்போது இவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, December 7, 2020, 9:48 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+