Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு காரணமா?.. ஐசிசி சொன்ன ரூல்.. பும்ரா முதல் சாஹல் வரை சொதப்பியது ஏன்.. பரபர பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலிங் சொதப்புவதற்கு ஐசிசி கொண்டு வந்த முக்கியமான விதிமுறை ஒன்றுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து கொண்டு இருக்கிறது. சிட்னியில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்களை எடுத்தது.

இந்த போட்டியில் தற்போது இந்தியா தோல்வியின் விளிம்பில் இருக்கிறது. 375 ரன்கள் இலக்கை நோக்கி அதிரடியாக ஆடி வரும் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது.

விக்கெட்

விக்கெட்

இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்பியதுதான் இன்று அதிக ரன்கள் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இன்று ஷமி மட்டுமே நன்றாக பவுலிங் செய்து 3 விக்கெட் எடுத்தார். பும்ரா, சாஹல், சைனி மூவரும் ஓவருக்கு கிட்டத்தட்ட 8 ரன்களை கொடுத்து மோசமாக சொதப்பினார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதனால்தான் ஆஸ்திரேலியா அதிக ரன்களை எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலிங் சொதப்புவதற்கு ஐசிசி கொண்டு வந்த முக்கியமான விதிமுறை ஒன்றுதான் காரணம் என்று கூறுகிறார்கள். கொரோனா காரணமாக பந்தில் எச்சில் தடவ கூடாது என்று விதி உள்ளது.

பந்து

பந்து

இதனால் இந்திய பவுலிங்கின் போது பந்தை தேய்த்து ஸ்விங் செய்ய முடியாமல் வீரர்கள் கஷ்டப்பட்டனர். இதனால் பும்ரா, சாகல் போட்ட பந்துகள் கொஞ்சம் கூட ஸ்விங் ஆகவில்லை. பந்து சொரசொரப்பாக மாறாமல் அப்படியே இருந்தது. வீரர்களால் எச்சில் கொண்டு பந்தை தேய்க்க முடியவில்லை. இதனால் இந்திய பவுலர்களால் பந்தை ஸ்விங் செய்து விக்கெட் எடுக்க முடியவில்லை.

போக போக மாறியது

போக போக மாறியது

ஆனால் போக போக பிட்ச் மாறியது. இதனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தனர். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்களும் இந்தியாவிற்கு எதிராக விக்கெட் எடுத்தனர். பிட்ச் மாறிய காரணத்தால் புதிய பந்திலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக விக்கெட் எடுக்க முடிந்தது.

Story first published: Friday, November 27, 2020, 18:23 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+