For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடி வந்து கட்டிபிடித்துக்கொண்டார்.. நடராஜனை புகழ்ந்த அந்த சர்ச்சை மன்னன்..நங்கூரமிட்டு அமர்ந்த நட்டி

சிட்னி: இந்திய அணியில் மிகவும் சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனை கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 194 ரன்கள் எடுத்தது.

பவுலர்கள்

பவுலர்கள்

இன்று இந்திய அணியின் பவுலர்கள் யாரும் சரியாக பந்து வீசவில்லை. சாகர் 4 ஓவரில் 48 ரன்கள் கொடுத்தார். வாஷிங்க்டன் சுந்தர் 4 ஓவரில் 35 ரன்கள் கொடுத்தார். தாக்கூர் ஒரு விக்கெட் எடுத்து 4 ஓவரில் 39 ரன்கள் கொடுத்தார். சாஹல் ஒரு விக்கெட் எடுத்து 4 ஓவரில் 51 ரன்கள் கொடுத்தார்.

யார்

யார்

இன்று பவுலிங் செய்த மேற்கண்ட எல்லா வீரர்களும் ஒரு ஓவருக்கு 8+ ரன்களை அள்ளிக்கொடுத்தனர். ஆனால் தமிழக வீரர் நடராஜன் மட்டுமே இன்று சிறப்பாக பவுலிங் செய்தார். இவர் போட்ட 4 ஓவரில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பவுண்டரி கொடுத்தார். மற்ற பந்துகளில் எல்லாம் சிங்கிள் செல்வதே அபூர்வமாக இருந்தது.

அபூர்வம்

அபூர்வம்

அதோடு 4 ஓவரில் இவர் வெறும் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அதிரடியாக ஆடிய ஹெண்ட்ரிக்கஸ் மற்றும் ஓப்பனர் ஆர்சி விக்கெட்டுகளை எடுத்தார் நடராஜன். கடந்த போட்டியிலும் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். தான் அறிமுகம் ஆன ஒருநாள் போட்டியிலும் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஒவ்வொரு போட்டியிலும் இவர் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இன்று மற்ற பவுலர்கள் சொதப்பிய போதும் கூட நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து அசத்தினார். இவரின் ஆட்டத்தை பார்த்து கோலியே அசந்து போய் சந்தோசத்தில் இவரை கட்டிக்கொண்டார். அதேபோல் இவருக்கு ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி நம்பிக்கை கொடுத்தார். இணையம் முழுக்க நடராஜனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு

பாராட்டு

மும்பை அணியில் இல்லாத வீரர்களை பொதுவாக கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்வார். நடராஜனையும் இவர் தொடக்கத்தில் விமர்சனம் செய்தார். ஆனால் இன்று அந்த சர்ச்சை மன்னன் சஞ்சய் மஞ்சிரேக்கரே நடராஜனை பாராட்டி உள்ளார்.

சஞ்சய் மஞ்சிரேக்கர்

சஞ்சய் மஞ்சிரேக்கர்

சஞ்சய் மஞ்சிரேக்கர் இன்று செய்த டிவீட்டில், எதிரணி வீரர்கள் கிட்டத்தட்ட 200 ரன்கள் எடுத்துவிட்டனர். முதல் பவர்பிளேவில் நடராஜன் பவுலிங் செய்து பின் மீண்டும் டெத் ஓவரில் 19வது ஓவரை வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே எக்கனாமி வைத்துள்ளார். அந்த அளவிற்கு அந்த வீரர் சிறப்பான பவுலிங் செய்துள்ளார்.

பவுன்சர்

பவுன்சர்

அதிலும் பவுன்சர் போட்டு விக்கெட் எடுத்துள்ளார். தன்னுடைய கிரீடத்தில் மேலும் இறகுகளை சேர்த்துக் கொள்கிறார். சூப்பர் நடராஜன் என்று, நடராஜனை மனம் வந்து சஞ்சய் மஞ்சிரேக்கர் பாராட்டி உள்ளார். நடராஜனின் அறிமுகத்தை விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்சிரேக்கர் தற்போது அதே நடராஜனை பாராட்டி உள்ளார்.

Story first published: Sunday, December 6, 2020, 22:06 [IST]
Other articles published on Dec 6, 2020
English summary
AUS vs IND: Sanjay Manjrekkar gives hats offs to Natarajan, a non-Mumbai Player in IPL.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+