
எப்படி
இந்த தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக கஷ்டப்பட்ட கேரளாவை சேர்த்த வீரர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன் சில போட்டிகளில் நன்றாக ஆடி இருந்தாலும் இந்த தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. இவர் மீது இந்திய அணி நிர்வாகம் பெரிய நம்பிக்கை வைத்து இருந்தது.

ஆனால் என்ன
ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இந்திய அணியிலும் இந்த முறை வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் இந்திய அணியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சரியாக ஆடவில்லை. ஷ்ரேயஸ் ஐயருக்கும் முன்பாக இவரை களமிறக்கி கோலி இவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கினார். இவர் மீதான நம்பிக்கையால்தான் ஷ்ரேயஸ் ஐயருக்கும் முன்பாக இவருக்கு வாய்ப்பு வழங்கபப்ட்டது.

மோசம்
இவருக்கு இவ்வளவு சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்பட்ட பின்பும் கூட சஞ்சு சாம்சன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மூன்று டி 20 போட்டிகளிலும் இவர் 20 ரன்களை கூட தாண்டவில்லை. களத்திற்கு வருகிறார். அவசர அவசரமாக சிக்ஸ், பவுண்டரி அடிக்கிறார். பின் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்துவிட்டு அவுட்டாகி விடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு இல்லை
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் பல மாதங்கள் புலம்பி இருக்கிறார். கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இவருக்காக இணையத்தில் புலம்பி உள்ளனர். ஆனால் இப்போது வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை.

கெரியர்
இவர் ஆடும் 4வது இடத்தில் களமிறங்க இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, பண்ட் என்று பல வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் தற்போது சஞ்சு சாம்சன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். சரியாக ஆடவில்லை என்றால் கிரிக்கெட் கெரியரே காலியாகிவிடும் சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











