
எப்படி
இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் கொடுத்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 போட்டியில் மிடில் ஆர்டரில் இவர் களமிறங்கி ஆடினார். ஆனால் மிடில் ஆர்டரில் இவர் களமிறங்கி அதிக ரன்கள் எடுக்கவில்லை.

வேகம்
வேகமாக மைதானத்திற்குள் வந்து சிக்ஸ் பவுண்டரி என்று அடித்தார். கொஞ்சம் ரன் ரேட்டை ஏற்றிவிட்டு, வேகமாக திரும்பி சென்றுவிட்டார். இவர் 15 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் எடுக்க முடியாமல் திணறினார். மைதானத்திற்கு வந்துவிட்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஆடிவிட்டு அவுட்டாகி வெளியேறினார்.

என்னாச்சு
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் சொன்னபடிதான் நான் நடந்தேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். நான் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என்று கூறினார்கள். விக்கெட் பற்றி கவலை வேண்டாம். சிக்ஸ் பவுண்டரி அடியுங்கள்.

ரன் ரேட்
ரன் ரேட்டை உயர்த்துவதுதான் உங்கள் நோக்கம். அதிரடி காட்டுங்கள் என்று கூறினார்கள். அதனால் அப்படி ஆடினேன். களத்தில் நீண்ட நேரம் இல்லாதது எனக்கு கவலை அளிக்கவில்லை. திட்டப்படிதான் நான் நடந்தேன், என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

விமர்சனம்
இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சஞ்சு சாம்சன் சரியாக ஆடவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் எதுவும் தவறு செய்யவில்லை. எல்லா திட்டமும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருடையது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications