Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானமே மிரண்டுவிட்டது.. ஒரு நிமிடம் அதிர்ந்து போன கோலி.. அப்படி என்ன செய்தார் சஞ்சு.. பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் செய்த பீல்டிங் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டிற்கு 186ரன்கள் எடுத்தது. இன்று இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இரண்டு கேட்ச்களை இந்திய பீல்டர்கள் தவறவிட்டனர்.

வைரல்

வைரல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் செய்த பீல்டிங் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தாக்கூர் பவுலிங் செய்த 14வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் 2வது பந்தை மேக்ஸ்வெல் சிக்ஸ் அடிக்க முயன்றார். மிட் ஆப் திசையில் பந்து சென்றது.

எப்படி

எப்படி

பந்து சிக்ஸ் செல்லும் என்றுதான் மைதானமே நினைத்தது. ஆனால் திடீர் என்று ஓடி வந்த சஞ்சு சாம்சங் பறந்து சென்று பந்தை கேட்ச் பிடித்து பவுண்டரி கோட்டிற்கு உள்ளே தூக்கி எறிந்தார். காலையே சிக்ஸ் கோட்டிற்கு உள்ளே வைக்கும் முன் அவர் பந்தை வேகமாக தூக்கி எறிந்தார்.

செம

செம

வேகமாக செயல்பட்டு பந்தை பிடித்து உள்ளே வீசி விட்டு, பின் வேகமாக எழுந்து வந்து ஓடி, அதை கீப்பரிடம் கொடுத்தார். இதனால் 6 ரன்கள் செல்ல வேண்டிய பந்தில் 2 ரன்கள் மட்டுமே சென்றது. இவர் பறந்து சென்று பந்தை பிடித்து இப்படி எறிந்தது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

மைதானம்

மைதானம்

மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் எழுந்து நின்று சஞ்சு சாம்சனுக்கு கைதட்ட தொடங்கினார்கள். இந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்த பீல்டிங்கை பார்த்து மிரண்டு போனார். இணையம் முழுக்க தற்போது சஞ்சு சாம்சன் குறித்து பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

ஐசிசி

ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இவரை பாராட்டி டிவிட் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ் இந்தியா தொடங்கி பலர் சஞ்சு சாம்சனின் பீல்டிங்கை பாராட்டி உள்ளனர். கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் சஞ்சு சாம்சனை இதற்காக பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Tuesday, December 8, 2020, 16:55 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+