அந்த பார்வை.. ஏன் இவ்வளவு கோபம்.. ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்த சிஎஸ்கே புயல்.. பின்னணி!
சிட்டி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலர் ஷர்த்துல் தாக்கூர் மிகவும் அதிரடியாக பவுலிங் செய்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை வென்று இருந்தாலும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெற்றுள்ளது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆவதை தவிர்க்கும் வகையில் இந்திய அணி உஷாராகி சிறப்பாக பவுலிங் செய்தது.

எப்படி
கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமாக முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வந்தனர். ஆனால் இன்று முதல்முறை களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் 6வது ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து
அதன்பின் ஓவர் போட வந்த ஷரத்துல் தாக்கூர் அடுத்தடுத்து அதிரடியாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்தார். அதோடு ரன் செல்வதையும் கட்டுப்படுத்தினார். கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு தண்ணீர் காட்டி சதம் அடித்த ஸ்மித் விக்கெட்டை எளிதாக தாக்கூர் எடுத்தார். அதன்பின் மொய்சஸ் விக்கெட்டையும் எடுத்தார்.

மொய்சஸ் விக்கெட்
முக்கியமாக மொய்சஸ் விக்கெட்டை எடுத்துவிட்டு ஷரத்துல் தாக்கூர் கோபமாக முறைத்தார். எனக்கு ஏன் இத்தனை நாட்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல மிகவும் கோபமாக காணப்பட்டார். ஆஸ்திரேலிய - இந்திய வீரர்கள் இடையே நல்ல நட்பு இருக்கும் போதும் கூட மொய்சஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு தாக்கூர் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் இருந்தே ஷர்த்துல் தாக்கூர் நல்ல பார்மில் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக இவர் நன்றாக பந்து வீசினார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.வரும் நாட்களில் இந்திய அணி இவரை சிறப்பாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications