Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ.. என்ன நடக்கும்?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

சிட்னியில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வீழ்ந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 389 ரன்கள் குவித்தது. இதன்பின் இறங்கிய 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து இந்தியா 338 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு கேப்டன் கோலி செய்த சில தவறுகள்தான் காரணம் என்கிறார்கள்.

பதவி விலகல்

பதவி விலகல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் இப்போது வைக்கப்படவில்லை. கடந்த உலகக் கோப்பையில் இருந்தே இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அப்போது கோலியின் கேப்டன்சி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.

கேள்வி

கேள்வி

உலகக் கோப்பை 2019க்கு இந்திய அணியை கோலி தயார் செய்யவில்லை என்று அப்போதே புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கோலி மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்து இருந்தது. ஆனால் தற்போது ஒருநாள் தொடரை இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது. அதேபோல் கடந்த 5 சர்வதேச போட்டிகளில் இந்தியா தொடர் தோல்வியை தழுவி உள்ளது.

கேப்டன்

கேப்டன்

இந்திய அணியில் இன்னும் பல பிரச்சனைகள் சரி செய்யப்படாமல் உள்ளது. அணி தேர்விலும் கோலி சொதப்புகிறார். கோலி வந்த பின் அணிக்குள் ஒற்றுமை குறைந்துவிட்டது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் தற்போது ஆஸ்திரேலிய தொடரில் கோலி எடுத்த முடிவுகள் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

அடுத்த வருடம் உலகக் கோப்பை டி 20 தொடர் நடக்க உள்ளது. இதனால் இந்திய அணியை அதற்கு முன் தயார் செய்ய வேண்டும். இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டனை மாற்றி, இப்போதே அணியை தயார் செய்ய வேண்டுமென்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ரோஹித் சர்மா கேப்டன்

ரோஹித் சர்மா கேப்டன்

கேப்டன்சி பொறுப்பில் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும். ரோஹித் சர்மா மூன்று விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும்.கோலி பேட்ஸ்மேனாக இருந்தால் அவரும் பார்ம் திரும்ப வசதியாக இருக்கும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

நெட்டிசன்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்து வருகிறார்கள். பிசிசிஐ அமைப்பும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் செயல்பாட்டை கூர்ந்து கவனித்து வருகிறது. ஆனால் இப்போதைக்கு கோலி மாற்றப்படுவதற்கு வழி இல்லை என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, November 30, 2020, 16:23 [IST]
Other articles published on Nov 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+