Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பாட் கிளியர்.. திரும்பி பார்த்த கோலி.. இந்திய அணியில் நங்கூரம் போட்டு அமர போகும் நடராஜன்.. பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்திய அணிக்குள் தனக்கு நெருக்கமான பவுலர் ஒருவரை கொண்டு வர வேண்டும் என்பது கோலியின் பல நாள் கனவு. அதாவது தன்னுடைய கண்டுபிடிப்பு போல ஒரு வீரர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று கோலி பல நாட்களாக திட்டமிட்டு இருந்தார்.

ரோஹித் சர்மா எப்படி பும்ராவை கண்டுபிடித்தாரா, தோனி எப்படி ஷரத்துல், சாகர் என்று பெரிய படையை கண்டுபிடித்தாரா அப்படி ஒரு படையை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கோலியின் விருப்பம்.

ஆனால்

ஆனால்

ஆனால் கோலி இந்திய அணியில் களமிறக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சரியாக ஆடவில்லை. இந்திய அணியில் கோலி வளர்த்து விட நினைத்த உமேஷ் யாதவ், சிராஜ் என்று யாருமே சரியாக ஆடவில்லை. இந்திய அணியில் கோலி தற்போது களமிறங்கிய சைனியும் கூட சரியாக ஆடுவது இல்லை.

மோசம்

மோசம்

பும்ரா போல தரமான வீரர் ஒருவரை இந்திய அணிக்குள் அறிமுகப்படுத்தி, அவரை தன்னுடைய ஆஸ்தான பவுலராக வைக்க வேண்டும் என்பதே கோலியின் கனவாக இருந்தது. தற்போது கோலியின் நேரடி பார்வையில் வாய்ப்பு பெற்று இருக்கும் நடராஜன் இந்திய அணியில் கோலியின் கனவை பூர்த்தி செய்வார் என்று கூறுகிறார்கள்.

கோலியின் கனவு

கோலியின் கனவு

நேற்று இந்திய அணியில் அறிமுகம் ஆன நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். முக்கியமாக நேற்று புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசினார். இவரின் பவுலிங் நேற்று உண்மையில் சிறப்பாக இருந்தது. நடராஜன் தனது சிறப்பான பவுலிங் மூலம் கோலியின் கவனத்தை திருப்பி உள்ளார்.

மாற்றம்

மாற்றம்

இந்திய அணியில் கண்டிப்பாக நடராஜனை கோலி வளர்த்துவிடுவார் என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவிற்கு பும்ரா நெருக்கமாக இருக்கும் நிலையில் நடராஜனை கோலி வளர்த்து விட வாய்ப்புள்ளது. அடுத்த டி 20 உலகக் கோப்பையில் பும்ரா, ஷமி, நடராஜன் மூன்று பேரும் பவுலிங் செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

சின்ன சேஞ்ச்

சின்ன சேஞ்ச்

நடராஜன் பவுலிங்கில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, இன்னும் கொஞ்சம் வேரியேஷன்களை கொண்டு வந்தால் போதும் மொத்தமாக அவர் பவுலிங்கில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. போக போக அது நடக்கும் என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் தற்போது நடராஜன் ஸ்பாட் கிளியர் என்கிறார்கள். கோலி இவரை கவனிக்க தொடங்கி உள்ளார்.

ஸ்பார்ட் கிளியர்

ஸ்பார்ட் கிளியர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் நடராஜன் கண்டிப்பாக இடம்பெறுவார். நடராஜன், பும்ரா, தாக்கூர் ஆகிய மூன்று பேர்தான் டி 20 தொடரில் இந்திய அணிக்கு பவுலிங் செய்வார்கள். அதிலும் நடராஜன் புதிய பந்தில் பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்... இந்திய அணியில் ஷாகீர் கான் விட்டுச்சென்ற லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலர் இடத்தில் நடராஜன் நங்கூரம் போட்டு அமர போகிறார் என்கிறார்கள்.

Story first published: Thursday, December 3, 2020, 11:36 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+