Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாற்று வீரர் கூட கிடையாதா?.. மிகப்பெரிய தவறு செய்த இந்திய அணி.. எவ்வளவு துணிச்சல் வேண்டும்!

சிட்னி: இந்திய அணியில் இருந்து கேப்டன் கோலி விலகி உள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக பேட்ஸ்மேன் யாருமே அறிவிக்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக கோலி இந்தியா திரும்பி உள்ளார்.

இதனால் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார். ரஹானே இந்திய கேப்டனாக இருப்பார்.

இந்திய அணி

இந்திய அணி

கோலி அணியில் இல்லாத நிலையில் மேலும் மூன்று வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஓப்பனிங் வீரர் ப்ரித்வி ஷா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியின் கீப்பர் விர்த்திமான் சாகா நீக்கப்பட்டு உள்ளார்.

மேலும்

மேலும்

அதேபோல் காயம் காரணமாக இந்திய அணியில் ஷமி நீக்கப்பட்டுள்ளார்.நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஜடேஜா, பண்ட், ஹனுமா விஹாரி, அஷ்வின், பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

நீக்கம்

நீக்கம்

இந்திய அணியில் இருந்து கேப்டன் கோலி விலகி உள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக பேட்ஸ்மேன் யாருமே அறிவிக்கப்படவில்லை. கேப்டன் கோலிக்கு பதிலாக இந்திய அணியில் இன்னொரு பேட்ஸ்மேன்தான் வர வேண்டும். கே . எல் ராகுல்தான் கேப்டன் கோலிக்கு பதிலாக அணியில் இடம்பெற்று இருக்க வேண்டும்.

ஆனால்

ஆனால்

ஆனால் கே. எல் ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியில் கூடுதலாக இன்னொரு ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரியும் இடம்பெற்றுள்ளார். கோலி போன்ற பேட்ஸ்மேனுக்கு மாற்றாக இன்னொரு பேட்ஸ்மேனை கொண்டு வராமல் ஆல் ரவுண்டரையே இந்திய அணி களமிறக்கி உள்ளது.

தவறு

தவறு

கோலி இல்லாத நிலையில் கூடுதலாக பேட்ஸ்மேனை இறக்காமல் இந்திய அணி பெரிய தவறை செய்துள்ளது. கே . எல் ராகுலுக்கு அணியில் வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்து இருக்கும். ஆனால் இந்திய அணியில் தற்போது 6 பவுலர்கள் உள்ளனர்.

பவுலிங்

பவுலிங்

இதனால் இந்திய அணியின் பவுலிங் மிகவும் வலிமையாக உள்ளது. ஆனால் பேட்டிங் அத்தனை வலிமையாக இல்லை. ஒரு வகையில் இந்திய அணி தேவையின்றி ரிஸ்க் எடுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Friday, December 25, 2020, 13:31 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+