எல்லோரும் எதிர்பார்த்த நாள்.. நடராஜனோடு அவரும் வருகிறார்.. மொத்தமாக மாறும் காட்சி.. டிவிஸ்ட் இருக்கு
சிட்னி: இந்திய அணியில் இன்று பவுலிங் ஆர்டரில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று நடக்க உள்ளது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்றும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற நிலைத்துள்ளது.
இன்று நடக்கும் இரண்டாவது டி 20 போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி ஒருநாள் தொடர் தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

பதிலடி
முதல் டி 20 போட்டியில் பும்ரா இல்லாமலே இந்திய அணி வெற்றிபெற்றது. டெத் ஓவர்களில் ஜடேஜா நிகழ்த்திய மாயமும். மிடில் ஆர்டர் சாஹல் எடுத்த விக்கெட்டும் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. ஆனால் அன்று நடந்த போட்டியில் சமி மட்டும் சரியாக பவுலிங் வீசவில்லை.

பவுலிங்
இந்த நிலையில் இந்திய அணியில் இன்று பவுலிங் ஆர்டரில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். கடந்த போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் ஷமியும் உட்கார வைக்கப்பட்டு ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் எடுக்கப்படுகிறார்.

கூடுதல்
இன்று கூடுதல் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கும். அதன்படி நடராஜன்,ஷரத்துல் , சாகர், சாஹல், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. டி 20 டெத் ஓவர்களில் ஷரத்துல், நடராஜன் இரண்டு பேரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க கூடிய வீரர்கள்.

எதிர்பார்ப்பு
இன்று இந்திய அணிக்குள் நடராஜன், ஷரத்துல் இரண்டு பேரும் பவுலிங் செய்ய போகிறார்கள். இதனால் இன்றைய ஆட்டம் தெறி மாஸ்ஸாக இருக்கும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இதனால் திணற போகிறார்கள்.

இன்று நடக்கும் மேட்ச்
இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் தவான், ராகுல், கோலி, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா,ஷரத்துல், சாஹல், சாகர், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications