Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த "கோட்டாவை" நீக்கிய இந்திய அணி.. எதிர்பார்க்காத வெற்றி.. கோலிக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்

சிட்னி: இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஆர்சிபி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் கூட இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம்

காரணம்

இந்த நிலையில் இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஆர்சிபி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் கேப்டன் கோலி தனது ஆர்சிபி அணி வீரர்களை அதிக அளவில் எடுப்பார். நன்றாக ஆடினாலும், ஆடவில்லை என்றாலும் ஆர்சிபி வீரர்களை அணியில் எடுத்து வாய்ப்பு கொடுப்பர் .

எப்படி

எப்படி

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் சாஹல், சைனி இடம்பெற்று இருந்தனர். இவர்கள் இருவரும் ஆர்சிபி வீரர்கள். ஆனால் இவர்கள் இருவருமே சரியாக பந்து வீசவில்லை. முதல்முறையாக நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவரையும் கோலி நீக்கிவிட்டு புதிய டீமோடு ஆடினார். ஆர்சிபி பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியது.

ஆர்சிபி

ஆர்சிபி

நேற்று இந்திய அணியில் நடராஜன், ஷரத்துல் தாகூர், குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேருமே நேற்று நன்றாக பந்து வீசினார்கள். சைனி, சாஹலை விட இவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் நடராஜன் 2 விக்கெட், ஷரத்துல் 3 விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

இந்திய அணியில் ஆர்சிபி கோட்டாவை நீக்க வேண்டும். ஆர்சிபி வீரர்களை எடுக்காமல் திறமையான வீரர்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் இந்தியா வெற்றிபெற்றது. இதுவும் கூட இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 3, 2020, 10:04 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+