Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேருமே இப்படி வந்தால் எப்படி.. முதல்நாள் போட்டியிலேயே இந்திய அணிக்கு ஆஸி தந்த அதிர்ச்சி.. பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் முழு பார்மில் உள்ளனர். அதிலும் முக்கியமான மூன்று பேட்ஸ்மேன்கள் பார்மிற்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு சிக்கலாக மாறி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லும் வேகத்தை பார்த்தால் இன்று 350+ ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய பவுலர்கள் இன்று மிக மோசமாக திணறி வருகிறார்கள்.

அடிக்கிறார்கள்

அடிக்கிறார்கள்

இந்திய அணியின் பவுலர்கள் எப்படி போட்டாலும் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் அதை அடித்து துவம்சம் செய்கிறார்கள். பும்ரா, சாஹல், ஷமி, சைனி என்று உலகத்தரமான பவுலர்கள் இருந்தும் கூட ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை எடுக்கவே இந்திய அணி கடுமையாக திணறியது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர்களின் பார்ம்தான். ஆஸ்திரேலியாவின் முக்கியமான மூன்று வீரர்கள் பார்மிற்கு திரும்பி உள்ளனர். ஓப்பனிங் வீரர் வார்னர், பின்ச், ஸ்மித் மூன்று பேருமே பார்மிற்கு திரும்பி உள்ளனர்.

 ஒருநாள்

ஒருநாள்

அதிலும் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கும் ஸ்மித் இன்று காட்டு அடி அடித்தார். ஓப்பனிங் வீரர் பின்ச் அதிரடியாக ஆடி 124 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் 76 பந்துகளை பிடித்த வார்னர் 69 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் ஸ்மித்தும் வெறும் 55 பந்தில் 85 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.

 மோசம்

மோசம்

இந்த மூன்று வீரர்களும் கடந்த 2 வருடமாக பெரிய பார்மில் இல்லை. தடைக்கு பின் திரும்பி வந்த ஸ்மித் ஒருநாள் போட்டியில் சரியாக ஆடவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் வார்னர் ஐபிஎல்லில் நன்றாக ஆடினாலும், ஆஸ்திரேலிய அணியில் சரியாக ஆடவில்லை.

பின்ச் திணறல்

பின்ச் திணறல்

அதேபோல் பின்சும் பார்ம் அவுட் - இன் என்று கஷ்டப்பட்டு வந்தார். உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய தோல்விக்கும் இது முக்கிய காரணமாக இருந்தது. ஸ்மித், பின்ச் இருவருமே ஐபிஎல் தொடரிலும் மோசமாக திணறினார்கள். இந்த நிலையில்தான் இவர்கள் மூவரும் தற்போது பார்மிற்கு திரும்பி உள்ளனர்.

பார்ம்

பார்ம்

3 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் இணை மொத்தமாக பார்மிற்கு திரும்பி உள்ளது. 3 வீரர்களும் மாஸ்ஸாக பார்மிற்கு திரும்பி உள்ளனர். 2017 தொடக்கத்தில் இருந்தது போல ஆஸ்திரேலியா மாறி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்க போகிறது.

Story first published: Friday, November 27, 2020, 16:10 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+