Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவசர அவசரமாக.. பாதியில் வெளியேறிய ஜடேஜா.. கோபமாக சென்று புகார் செய்த ஆஸி. கேப்டன்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் செயல் ஒன்றால் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கடும் கோபத்திற்கு உள்ளானார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. நேற்று பவுலிங்கில் ஆக்ரோஷம் காட்டிய இந்திய அணி இன்று பேட்டிங்கில் மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறது.

இன்று இந்திய அணியில் பண்ட், சுப்மான் கில், ஜடேஜா ஆகியோர் மிக சிறப்பாக ஆடினார்கள். இன்னொரு பக்கம் ரஹானே மிகவும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.

சதம்

சதம்

இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக திணறினார்கள். ரஹானேவிற்கு எப்படி பவுலிங் போட்டாலும் ரஹானே அதை சிறப்பாக எதிர்கொண்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் முகத்தில் விரக்தியை வெளிப்படையாக காட்ட தொடங்கினார்கள்.

எப்போது

எப்போது

எப்போது இந்த நாள் முடியும், நாளை மீண்டும் புத்துணர்வோடு களமிறங்கலாம் என்ற மனநிலைக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் வந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்று ரஹானே சதம் அடித்த பின் ஓவர்களுக்கு இடையில் சிறிய டிரிங்ஸ் பிரேக் எடுத்தார். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அந்த இடைவெளியில் ஜடேஜா அவசர அவசரமாக பெவியலியன் சென்றார்.

தெரியவில்லை

தெரியவில்லை

உடையை மாற்ற சென்றாரா அல்லது சிறுநீர் இடைவெளி எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. ரஹானே டிரிங்ஸ் பிரேக் எடுத்த நேரத்தில் ஜடேஜா பெவிலியன் சென்றுவிட்டு, 2 நிமிடம் கழித்து வந்தார். ஜடேஜா இப்படி உள்ளே சென்றுவிட்டு, வெளியே வந்தது ஆஸ்திரேலிய கேப்டன் திம் பெயினை கோபத்திற்கு உள்ளாக்கியது.

கோபம்

கோபம்

ஜடேஜா இப்படி உள்ளே சென்று வந்ததை ஏற்றுக் கொள்ளாத டிம் பெயின் வேகமாக சென்று நடுவரிடம் புகார் அளித்தார். ஜடேஜா கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று டிம் பெயின் புகார் அளித்தார். அதன்பின் திரும்பி வந்த ஜடேஜா.. அவசர தேவைக்காக உள்ளே சென்று வந்ததாக டிம் பெயினிடம் விளக்கம் அளித்தார்.

Story first published: Sunday, December 27, 2020, 13:11 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+