Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் ஏமாற்றம்.. அணியில் எடுக்காமல் புறக்கணிக்கும் கோலி.. மொத்தமாக பதிலடி கொடுத்த அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதி வரும் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. மூன்றாவது டி 20 போட்டிக்கு பின் இரண்டு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலிய ஏ ஆகிய அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் ஆட்டம் நடந்து வருகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இந்திய ஏ அணியின் பேட்டிங் இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏ அணியின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. புஜாரா இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை. ரஹானே மட்டுமே நம்பிக்கை அளித்து வருகிறார்.

எப்படி

எப்படி

இந்திய அணி சார்பாக ஏ அணியின் கேப்டன் ரஹானே 117 ரன்கள் எடுத்தார். மொத்தமாக இந்திய அணி 93ஓவரில் 9 விக்கெட்டிற்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி இருந்தாலும் கூட பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

பவுலிங்

பவுலிங்

இந்திய அணியின் பவுலர்கள் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். முக்கியமாக இந்திய ஏ அணிக்காக பவுலிங் செய்த அஸ்வின் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இவரின் பவுலிங்கை தொட கூட முடியாத நிலை இருந்தது.

லைன்

லைன்

ஆப் ஸ்பின் மட்டுமே போட்ட அஸ்வின் போட்டி முழுக்க எதிரணியை கட்டுப்படுத்தினார். சரியான லென்தில் இவர் பந்து வீசி, தனது ஸ்பின்னை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். இதுவரை மொத்தம் 19 ஓவர்கள் வீசி உள்ள அஸ்வின் 2 விக்கெட் எடுத்து வெறும் 58 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

திணறல்

திணறல்

இவரின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் ஏ அணி வீரர்கள் திணறி வருகிறார்கள். இந்திய ஏ அணிக்காக ஆடி வரும் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளிலும் நல்ல பார்ம்மில் இருந்தார். டெல்லி அணிக்காக சிறப்பாக இவர் விக்கெட்டுகளை எடுத்து வந்தார்.

ஆனால் வாய்ப்பு

ஆனால் வாய்ப்பு

ஆனால் இந்திய ஒருநாள் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ் பார்ம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார். இப்போதும் கூட ஏ அணியில் குல்தீப் மிகவும் மோசமாக பந்து வீசி வருகிறார். ஆனால் அப்போதும் அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

தொடர்ந்து சிறப்பாக ஆடியும் கூட டெஸ்ட் அணியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒருநாள் அணியில் சேர்க்கப்படுவது இல்லை . ஒவ்வொரு முறையும் புறக்கணிப்புகள் அனைத்திற்கும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அதிரடி பதிலடி கொடுத்து வருகிறார்.

Story first published: Monday, December 7, 2020, 17:27 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+