உள்ளே வந்த கறுப்புக் கார்.. பாதி போட்டியில் கிளம்பி சென்ற வார்னர்.. துடித்தேவிட்டார்.. பரபர சம்பவம்!
சிட்னி: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் பாதியில் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.
இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 390 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 389/4 ரன்கள் எடுத்துள்ளது.

என்ன ஆச்சு
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் போட்டியின் பாதியில் வெளியேறினார். 4வது ஓவரின் போது பந்தை தடுக்க சென்ற வார்னருக்குக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் களத்திலேயே விழுந்து வார்னர் துடித்தார். நடக்க முடியாமல் நடந்தார்.

எப்படி
இதையடுத்து உடனே வந்து அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். ஆனால் அவரால் களத்தில் தொடர்ந்து நிற்க முடியவில்லை. இதையடுத்து அவரை இன்னொரு வீரரின் உதவியோடு கைத்தாங்கலாக கூட்டி சென்றனர். அவர் காலை தரையில் ஊன்ற முடியாமல் திணறி போனார்.

கார் வந்தது
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இருக்கும் பெவிலியன் பகுதியின் பின் பக்கத்திற்கு கார் ஒன்று வந்தது. வார்னரை மருத்துவமனை கூட்டி செல்வதற்காக அந்த கருப்பு கார் உள்ளே வந்தது. இதில் ஏறி வார்னர் தற்போது மருத்துவமனை சென்றுள்ளார்.

மோசம்
இவருக்கு காலிலும், தொடையிலும் அடி பட்டு இருக்கிறது. அடி வயிற்றிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் இவர் ஆடுவது சந்தேகம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications