Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இன்னும் வரவில்லை.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பிசிசிஐ.. ரோஹித் - கோலி வீடியோ கால்.. பேசியது என்ன?

டெல்லி: ரோஹித் சர்மா மற்றும் கோலி இடையே நடந்த வீடியோ கான்பிரன்சில் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மண்ணை கவ்வி உள்ளது. கடைசியாக நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்திய அணி இருக்கிறது.

இன்னொரு பக்கம் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதுதான் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏன்

ஏன்

ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மாவிற்கு எதிராக கோலி அரசியல் செய்கிறார். கோலி கொடுத்த அழுத்தம் காரணமாகவே ரோஹித் சர்மா அணியில் எடுக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

நேற்று

நேற்று

இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது. பிசிசிஐ நிர்வாகிகள், ரவி சாஸ்திரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் உடன் இருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. ரோஹித் சர்மா மற்றும் கோலி இடையே நடந்த வீடியோ கான்பிரன்சில் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

அதன்படி இந்த கான்பிரன்ஸ் காலில் ரோஹித் சர்மா காயம் குறித்து பேசப்பட்டுள்ளது. காயம் குணம் ஆன பின்பும் ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவிற்கு என்ன பிரச்சனை, ஐபிஎல் தொடரில் ஆடிய நீங்கள் ஏன் இன்னும் ஆஸ்திரேலியா வரவில்லை என்று அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.

நிலைமை

நிலைமை

அதேபோல் கோலியிடமும் நிறைய கேள்விகளை பிசிசிஐ தரப்பு கேட்டு இருக்கிறது. ரோஹித் உடன் என்ன மோதல், அணியில் இரண்டு மூத்த வீரர்கள் சண்டை போடவது ஏன், மும்பை வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அரசியல் செய்யப்படுகிறதா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

முக்கியம்

முக்கியம்

இரண்டு நாட்களுக்கு முன் கோலி பேட்டி அளித்த போது அவரிடம் ரோஹித் சர்மா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோலி, அணி தேர்வுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு காயம் இருப்பதாக செய்திகள் வந்தது. அவருக்கு ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது. அதற்கு பின் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இதனால் எங்களுடன் அவர் ஆஸ்திரேலியா வருவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் வரவில்லை.

கேள்வி

கேள்வி

இது தொடர்பாக எந்த தகவலும் எங்களிடம் முழுதாக இல்லை. நாங்கள் தற்போது தெளிவான விளக்கத்திற்காக காத்து இருக்கிறோம், என்று கூறி இருந்தார். ரோஹித் குறித்து எதுவுமே தெரியாது என்று கோலி கூறியது பெரிய சர்ச்சையானது. கோலி இப்படி பேட்டி அளித்தது ஏன்? ஏன் இப்படி பொறுப்பின்றி அவர் வெளிப்படையாக பேசினார் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

முடிவு

முடிவு

இந்த கான்பிரன்ஸ் காலின் முடிவில் டெஸ்ட் அணியில் ரோஹித் இணைவார். முன்னதாக ஆஸ்திரேலியா வந்து அவர் பயிற்சிகளை மேற்கொள்வார். அதற்குள் இரண்டு வீரர்களும் தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை தீர்க்க வேண்டும், ஆலோசனைகள் செய்து சண்டையை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 1, 2020, 14:57 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+