Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சுதான் முதலில் பார்த்தார்..மொத்த டீமும் பயத்தில் மூழ்கியது..ஜடேஜாவிற்கு நடந்த சம்பவம்..பரபரப்பு

சிட்னி: இந்திய அணியின் முன்னணி வீரர் ஜடேஜாவிற்கு ஏற்பட்ட காயம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி 20 போட்டியில் ஜடேஜா பாதியில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடிய ஜடேஜா தலையில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார்.

இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் விதிப்படி மாற்று வீரராக சாஹல் களமிறங்கினார். இந்த நிலையில் ஜடேஜாவிற்கு என்ன ஆனது என்று இந்திய அணி நிர்வாகி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

இது தொடர்பாக பெயர் வெளியிடப்படாத இந்திய அணி நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஜடேஜா தலையில் பந்து பட்டதை யாரும் பார்க்கவில்லை. சஞ்சு சாம்சன்தான் முதலில் இதை கவனித்தார். அவர்தான் அருகில் இருந்த மயங்க் அகர்வாலிடம் இது குறித்து குறிப்பிட்டார். உடனே மயங்க் அகர்வால் வேகமாக ஓடி வந்து அணி நிர்வாகத்திடம் அதை பற்றி பேசினார்.

காயம்

காயம்

இதனால் உடனே மருத்துவக்குழு வேகமாக விரைந்து ஜடேஜாவை சோதனை செய்தது.ஜடேஜாவிற்கு அப்போது பெரிய அளவில் பிரச்சனை இல்லை. ஜடேஜாவின் தலையில் ஐஸ் வைக்கப்பட்டது. எங்களுக்கு அச்சமாக இருந்தது. இதனால் அந்த ஓவர் முடியும் வரை அவர் களத்தில் இருந்தார். அதன்பின் பெவிலியன் வந்த பின் ஜடேஜா கொஞ்சம் தலை சுற்றலாக இருக்கிறது என்றார்.

தொடை

தொடை

அவருக்கு தொடையில் வேறு காயம் இருந்தது.அவருக்கு தொடையில் இருந்த காயத்தை நாங்கள் கவனிக்கவில்லை. தலையில் இருந் காயத்தைதான் கவனித்தோம். அவர் லேசாக தலை சுற்றுகிறது என்று கூறியவுடன் அவருக்கு பதில் சாஹலை மாற்று வீரராக அனுப்பினோம்.

தலையில் பெரியது

தலையில் பெரியது

அவருக்கு தலையில் பெரிய காயம் ஏற்பட்டு இருக்குமோ என்று அச்சம் அடைந்தோம். இது அப்பதான் விஷயம். அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறாரா என்று அவருக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டோம்.

கண்காணிக்கிறோம்

கண்காணிக்கிறோம்

தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தோம். அன்று இரவு ஸ்கேன் முடிவு வரும் வரை எங்களுக்கு அச்சம் இருந்தது. தற்போது ஜடேஜா ஓய்வில் இருக்கிறார், அவருக்கு ஆபத்து எதுவும் என்று இந்திய அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 8, 2020, 12:16 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+